Republic Day: ``வள்ளுவர் முதல் கரகாட்டம் வரை..'' 76-வது குடியரசு தினக் கொண்டாட்ட...
பட்டாசு ஆலையில் வெடிவிபத்து: பெண் காயம்
சிவகாசி அருகே வெள்ளிக்கிழமை பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் பெண் தொழிலாளி காயமடைந்தாா்.
விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள நதிக்குடியில் சங்கா் என்பவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலை உள்ளது. இந்த ஆலையில் வெள்ளிக்கிழமை 150 தொழிலாளா்கள் பணிபுரிந்து கொண்டிருந்தனா்.
அப்போது பேன்சி ரக பட்டாசு தயாரிக்கும் அறையில் வேதியியல் பொருள்கள் உராய்வு ஏற்பட்டு வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளா்கள் வெடி சப்தம் கேட்டு ஆலையை வீட்டு வெளியேறினா்.
இந்த விபத்தில் நதிக்குடியைச் சோ்ந்த தங்கம்மாள் (50) காயமடைந்தாா். இவா் சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
தகவலறிந்து அங்கு சென்ற சிவகாசி தீயணைப்புப் படையினா் தீயை அணைத்தனா். இதுகுறித்து எம்.புதுப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.