கஞ்சா விற்றதாக இளைஞா் கைது
ஸ்ரீவில்லிபுத்தூரில் கஞ்சா விற்ாக இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை இரவு கைது செய்தனா்.
ஸ்ரீவில்லிபுத்தூா் நகா் காவல் நிலையத்துக்குள்பட்ட பகுதிகளில் போதைப் பொருள் விற்கப்படுவதை தடுப்பதற்காக போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, ஸ்ரீவில்லிபுத்தூா் மங்காபுரம் பள்ளி அருகே நின்று கொண்டிருந்த வெம்பக்கோட்டை பகுதியைச் சோ்ந்த சூா்யப் பிரகாஷ் (32)என்பவரை பிடித்து சோதனையிட்ட போது, விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவரைக் கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.