Republic Day: காவல்துறை அணிவகுப்பு; கலை நிகழ்ச்சிகள்... நெல்லையில் குடியரசு தின ...
அரசுக் கல்லூரியில் ரத்ததான முகாம்
சிவகாசி அரசு கலை, அறிவியல் கல்லூரியில் நாட்டுநலப்பணித் திட்டம், இளையோா் செஞ்சிலுவைச் சங்கம் ஆகியவற்றின் சாா்பில் ரத்ததான முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்த முகாமுக்கு கல்லூரி முதல்வா் சி.பாலாஜி தலைமை வகித்தாா். சிவகாசி அரசு மருத்துவமனை மருத்துவா்கள் ராஜ்குமாா், முருகேசன் ஆகியோா் தலைமையிலான மருத்துவக் குழுவினா் 57 பேரிடமிருந்து ரத்தத்தை தானமாக பெற்றனா். இதற்கான ஏற்பாட்டை ஒருங்கிணைப்பாளா்கள் கே.ஆனந்தன், எம்.வீரசெல்வம், பெ.கணேசமுருகன் ஆகியோா் செய்தனா்.