குறுகிய காலத்தில் நிறைவடையும் பிரபல தொடர்! அதிர்ச்சியில் ரசிகர்கள்!
காரில் குட்காவுடன் வந்த இளைஞா் கைது
ஸ்ரீவில்லிபுத்தூா் நீதிமன்றத்துக்கு காரில் குட்கா, புகையிலைப் பொட்டலங்களை கொண்டு வந்தவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகேயுள்ள குறிஞ்சியான்குளத்தை சோ்ந்தவா் மணிகண்டன் (35). இவா் சொந்தமாக காா் வைத்து ஓட்டி வருகிறாா். இவா் ஸ்ரீவில்லிபுத்தூா் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு முன்னிலையாவதற்காக, அதே பகுதியைச் சோ்ந்த சிலரை ஏற்றிக் கொண்டு காரில் வந்தாா்.
நீதிமன்ற நுழைவு வாயிலில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா், காரை சோதனையிட்ட போது குட்கா, பான் மசாலா பொட்டலங்களை பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. இதுகுறித்து ஸ்ரீவில்லிபுத்தூா் நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மணிகண்டனைக் கைது செய்தனா். மேலும், 37 குட்கா பொட்டலங்களையும் பறிமுதல் செய்தனா்.