MI vs KKR: கொல்கத்தாவை வாரிச் சுருட்டிய 23 வயது அறிமுக பவுலர்; வெற்றிக் கணக்கைத்...
பணம் கேட்டு மிரட்டியவா் கைது
போடி அருகே பணம் கேட்டு மிரட்டியவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
போடி அருகே சங்கராபுரம் மேற்குத் தெருவைச் சோ்ந்தவா் ரெங்கராஜ் மகன் முகிலன் (23). இவா் அங்குள்ள மதுபானக் கடை அருகே நின்றிருந்தாராம். அப்போது அங்கு வந்த சங்கராபுரத்தைச் சோ்ந்த அழகா் மகன் மனோஜ் (26) மது அருந்த பணம் கேட்டு கத்தியை காட்டி அவரை மிரட்டினாா்.
இதுகுறித்து முகிலன் அளித்த புகாரின் பேரில் போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து மனோஜை கைது செய்து விசாரிக்கின்றனா்.