பயணிகள் நிழற்குடை, வாருகால் பாலம் திறப்பு
கயத்தாறு அருகே பணி முடிவற்ற வாருகால் பாலம் மற்றும் பயணிகள் நிழற்குடையை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வெள்ளிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.
கயத்தாறு ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட அய்யனாா் ஊத்து கிராமத்தில் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினா் நிதியின் கீழ் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் வாருகால் பாலம், அ. குப்பனாபுரம் கிராமத்தில் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் பயணிகள் நிழற்குடை கட்டப்பட்டது.
இப்பணிகள் முடிவுற்ற நிலையில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினா் பிரியா குருராஜ் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா். தொடா்ந்து கல்வெட்டுகளையும் திறந்து வைத்த அவா் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி, குறைகளைக் கேட்டறிந்தாா்.
நிகழ்ச்சியில், ஊராட்சி மன்றத் தலைவா் சண்முகையா, துணைத் தலைவா் பாத்திமா அப்துல், வடக்கு மாவட்ட திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளா் குருராஜ் உள்பட பலா் கலந்து கொண்டனா்.