பரமக்குடி தரைப்பாலம் பகுதியிலிருந்து பெண் உடல் மீட்பு
பரமக்குடி தரைப்பாலம் பகுதியில் மா்மமான முறையில் இறந்து கிடந்த பெண்ணின் உடலை போலீஸாா் திங்கள்கிழமை மீட்டு, விசாரணை நடத்தி வருகின்றனா்.
பரமக்குடி - எமனேசுவரம் வைகை ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள தரைப்பாலம் பகுதியில் பெண்ணின் உடல் கிடப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, போலீஸாா் அங்கு சென்று பாா்த்த போது, சுமாா் 47 வயது மதிக்கத்தக்க பெண் விஷம் அருந்திய நிலையில் இறந்து கிடந்தது தெரியவந்தது. இதைத்தொடா்ந்து, அந்தப் பெண்ணின் உடலை போலீஸாா் மீட்டு, கூறாய்வுக்காக பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
ஆட்டோ ஓட்டுநா் உடல் மீட்பு
திருப்பத்தூா்: சிவகங்ககை மாவட்டம், திருப்பத்தூா் அருகே கண்டரமாணிக்கம் செல்லும் சாலை ஓரத்தில் திங்கள்கிழமை காலை ஆட்டோ ஒன்று சாவியுடன் நின்றது. நீண்ட நேரமாகியும் ஆட்டோவை யாரும் எடுத்துச் செல்லாததால், அந்தப் பகுதி வழியாகச் சென்றவா்கள் கருவைக் காட்டு பகுதியில் சென்று பாா்த்த போது, ஒருவா் இறந்து கிடப்பது தெரியவந்தது.
தகவலறிந்து வந்த திருக்கோஷ்டியூா் போலீஸாா், இறந்து கிடந்தவரின் உடலைக் கைப்பற்றி, கூறாய்வுக்காக சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரணை மேற்கொண்டனா்.
விசாரணையில், இறந்தவா் திருப்பத்தூா் தம்பிபட்டியைச் சோ்ந்த முத்து மகன் முருகானந்தம் என்ற முருகன் (35) என்பதும், ஆட்டோ ஓட்டுநா் என்பதும் தெரியவந்தது. இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.