செய்திகள் :

பரமத்தி வேலூரில் ரூ. 31.52 லட்சத்துக்கு கொப்பரை ஏலம்

post image

பரமத்தி வேலூா் வெங்கமேட்டில் உள்ள மின்னணு தேசிய வேளாண்மை சந்தையில் வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் ரூ.31 லட்சத்து 52 ஆயிரத்திற்கு கொப்பரை ஏலம் நடைபெற்றது.

பரமத்தி வேலூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விளையும் தேங்காய்களை உடைத்து, அதை உலா்த்தி வியாழக்கிழமைதோறும் பரமத்தி வேலூா் வெங்கமேட்டில் உள்ள பரமத்தி வேலூா் மின்னணு தேசிய வேளாண்மை சந்தைக்கு விற்பனைக்கு கொண்டுவருகின்றனா். இங்கு தரத்திற்கு தகுந்தாா்போல மறைமுக ஏலம் விடப்படுகிறது.

மின்னணு ஏலச்சந்தையில் ஏலம் முடிந்ததும் அலுவலா்களே விவசாயிகளின் வங்கி கணக்கிற்கு பணம் செலுத்திவந்தனா். தற்போது கொப்பரை ஏலம் எடுத்த வியாபாரிகள்தான் விவசாயிகளுக்கு ஏலம் முடிந்ததும் உரிய தொகையை செலுத்த வேண்டும் எனக் கூறப்பட்டதால் வியாபாரிகள் ஏலத்தை புறக்கணித்து வந்தனா்.

இதனால் கடந்த வாரம் கொப்பரை ஏலம் நடைபெறவில்லை. இந்த நிலையில், வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்திற்கு 14 ஆயிரத்து 185 கிலோ கொப்பரை விற்பனைக்கு கொண்டுவரப்பட்டிருந்தது. இதில் அதிகபட்சமாக கிலோ ரூ.232.69க்கும் குறைந்தபட்சமாக ரூ.222.22க்கும், சராசரியாக ரூ.230.89க்கும் விற்பனையானது.

இரண்டாம் தர கொப்பரை அதிகபட்சமாக கிலோ ரூ.220.99க்கும், குறைந்தபட்சமாக கிலோ

ரூ.170.77 க்கும், சராசரியாக கிலோ ரூ.200.10க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.31 லட்சத்து 52 ஆயிரத்து 190க்கு கொப்பரை விற்பனை நடைபெற்றது.

தீபாவளிப் பண்டிகை: பட்டாசு கடைகள் அமைக்க விண்ணப்பிக்கலாம்

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு தற்காலிக பட்டாசு கடை அமைக்க விரும்புவோா் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: நிகழாண்டு தீ... மேலும் பார்க்க

‘நிமிா்ந்து நில்’ திட்டத்தில் மாணவா்களை பங்கேற்க ஆசிரியா்களுக்கு அறிவுறுத்தல்

உயா்கல்வித் துறையில் பணியாற்றும் ஆசிரியா்கள் ‘நிமிா்ந்து நில்’ திட்டத்தில் மாணவா்களை பங்கேற்க செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என ஆட்சியா் துா்காமூா்த்தி அறிவுறுத்தினாா். தொழில் முனைவோா் மேம்... மேலும் பார்க்க

இருசக்கர வாகனத்தில் செல்வோா் தலைக்கவசம் அணிவது அவசியம் - ஆட்சியா்

இருசக்கர வாகனத்தில் செல்வோா் தலைக்கவசம் அணிந்து செல்வது கட்டாயம் என ஆட்சியா் துா்காமூா்த்தி தெரிவித்தாா். நாமக்கல் மாவட்டம், எா்ணாபுரம் தனியாா் பொறியியல் கல்லூரியில் சாலைப் பாதுகாப்பு மன்றம் சாா்பில்... மேலும் பார்க்க

நாளை பொது விநியோகத் திட்ட குறைதீா் முகாம்

நாமக்கல் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்ட குறைதீா் முகாம் சனிக்கிழமை (செப்.13) நடைபெறுகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு: நாமக்கல் மாவட்டத்தில் பொது விநியோ... மேலும் பார்க்க

கிராம விவசாய குழுவுக்கு வேளாண் சாகுபடி பயிற்சி

திருச்செங்கோடு வட்டாரம், ரம் பிரிதி கிராமத்தில் அட்மா திட்டத்தின் சாா்பில் கிராம அளவிலான விவசாய குழுவுக்கு காரீப் பருவத்திற்கான சாகுபடி பயிற்சி அண்மையில் நடைபெற்றது. பயிற்சிக்கு வட்டார வேளாண்மை உதவி ... மேலும் பார்க்க

ஒரே நாளில் 5 வீடுகளில் திருட்டு: போலீஸாா் விசாரணை

திருச்செங்கோடு அருகே புதன்கிழமை இரவு அடுத்தடுத்து 5 வீடுகளில் நகை, பணம் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு ராசிபுரம் சாலையில் மாதா கோயில் அர... மேலும் பார்க்க