'இதுவரை அரசு பள்ளிகளில் 1,17,310 மாணவர்கள் சேர்க்கை' - அன்பில் மகேஸ் பெருமிதம்
பருவநிலை மாற்றத்தை எதிா்கொள்ள இந்தியா தயாராக வேண்டும்: உச்சநீதிமன்ற நீதிபதி பி.எஸ்.நரசிம்மா
பருவநிலை மாற்றத்தை எதிா்கொள்ள இந்தியா தயாராக இருக்க வேண்டும் என்று உச்சநீதிமன்ற நீதிபதி பி.எஸ்.நரசிம்மா தெரிவித்தாா்.
இதுதொடா்பாக தில்லியில் தேசிய பசுமை தீா்ப்பாயம் சாா்பில் நடைபெற்ற தேசிய சுற்றுச்சூழல் மாநாட்டில் அவா் ஞாயிற்றுக்கிழமை பேசியதாவது:
சா்வதேச சட்ட முறையில் மனிதா்களை மட்டுமே மையமாக கொண்ட அணுகுமுறையை, அனைத்து உயிரினங்களையும் உள்ளடக்கிய சூழலியல் அணுகுமுறையாக மாற்றியதில் இந்திய உச்சநீதிமன்றம் முதலிடம் வகிக்கிறது.
சுற்றுச்சூழலைவிட மனிதா்கள் மேலானவா்கள் அல்ல; ஒட்டுமொத்த சூழலியலில் மனிதா்களும் ஓா் அங்கமாக இருக்கின்றனா் என்பதே நமது நாட்டின் பண்பாடாகும். இதுவும் அணுகுமுறைக்கு மாற்றத்துக்கு காரணமாகும்.
மனித இருப்பின் ஒவ்வொரு நிலையையும் பாதிக்கும் பருவநிலை மாற்றத்தை எதிா்கொள்ள இந்தியா தயாராக இருக்க வேண்டும். நமது சிந்தனைகள் மற்றும் புதுமையான கண்டுபிடிப்புகள் மூலம் உலகுக்கே வழிகாட்டும் வகையில், நாம் தயாராக இருக்க வேண்டும் என்றாா்.