செய்திகள் :

பல்கலைக்கழக விடுதியில் உணவருந்திய 50 மாணவிகளுக்கு உடல்நல பாதிப்பு!

post image

மத்தியப் பிரதேச மாநிலத்திலுள்ள பல்கலைக்கழக பெண்கள் விடுதியில் இரவு உணவு சாப்பிட்ட 50க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.

அனுப்பூர் மாவட்டத்திலுள்ள இந்திரா காந்தி தேசிய பழங்குடியின பல்கலைக்கழக பெண்கள் விடுதியில் தங்கியுள்ள மாணவிகள், நேற்று (பிப்.25) இரவு அங்கு உணவு சாப்பிட்டு தங்களது அறைக்கு சென்றுள்ளனர். பின்னர், இரவு 11 மணியளவில் அங்குள்ள மாணவிகளில் 50க்கும் மேற்பட்டோருக்கு தலை வலி, வயிற்று வலி மற்றும் தொடர் வாந்தி ஏற்பட்டு உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட மாணவிகள் அனைவரும் பல்கலைக்கழகத்தின் மருத்துவ மையத்தில் அனுமதிக்கப்பட்டனர். இரவு உணவாக உருளைக் கிழங்கு, காளிஃபிளவர் பொறியல், அரிசி சாதம், ரொட்டி மற்றும் தால் ஆகியவை வழங்கப்பட்டதாகவும், அதில் அவர்கள் சாப்பிட்ட உருளைக் கிழங்கு பொறியல்தான் தங்களது உடல் நலம் பாதிக்கப்பட்டதற்கான காரணம் என மாணவிகளில் சிலர் கூறியுள்ளனர்.

இதையும் படிக்க: சம்பல் வழக்கு: மசூதி அருகேயுள்ள கிணற்றைப் பராமரிக்க உ.பி. அரசு கோரிக்கை!

இதுகுறித்து, பல்கலைக்கழகத்தின் செய்தி தொடர்பாளர் ராஜ்னீஷ் திரிபாதி கூறுகையில், உணவு தொற்றினால் மாணவிகளுக்கு உடல் நலக்கோளாறு ஏற்பட்டதாகவும், அவர்களில் யாருக்கும் பல்கலைக்கழகத்திற்கு வெளியே சிகிச்சைக்காக பரிந்துரைக்கப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும், அந்த சிகிச்சைக்கு பின்னர் மாணவிகள் அனைவரும் அவர்களது அறைக்கு ஓய்வு எடுக்க அனுப்பபபட்டதாகக் கூறப்பட்டுள்ளது.

மனிதர்களைத் தாக்க முயன்ற செய்யறிவு ரோபோ? விடியோ வைரல்!

சீனாவில் ரோபோ ஒன்று மனிதர்களைத் தாக்க முற்படுவது போன்ற விடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. சீனா நாட்டின் சைனீஸ் திருவிழா ஒன்றில் ஏராளமான கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. அதன் ஓர் பகுதியாக ஏஐ எனப்படும்... மேலும் பார்க்க

ஹோட்டல் ஜன்னல் வழியாக வீசி குழந்தை கொலை! அமெரிக்க பெண்ணிடம் விசாரணை!

பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரிஸில் ஹோட்டலின் ஜன்னல் வழியாக வீசப்பட்டு குழந்தையைக் கொன்றதாகக் கூறப்படும் அமெரிக்க பெண்ணை அந்நாட்டு அதிகாரிகள் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்... மேலும் பார்க்க

நின்றபடியே வேலை பார்ப்பவரா நீங்கள்? அப்போ, இது உங்களுக்குத் தான்!

மாறிவரும் 5ஜி யுகத்தின் வேகத்தில் வேலை செய்யும் முறைகள் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமாக மாறிவருகின்றன. ஓடி, ஓடி உழைத்த காலமெல்லாம் மலையேறிவிட்ட இந்த நவீன காலத்தில் உட்கார்ந்துகொண்டோ அல்லது ஒரே இடத்தி... மேலும் பார்க்க

சென்னை மின்வாரிய தலைமை அலுவலகத்தில் ஐ.டி.ரெய்டு

சென்னையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை அண்ணா சாலையில் தமிழ்நாடு மின்வாரியத்தின் தலைமை அலுவலகம் அமைந்துள்ளது, இங்குள்ள பசுமை எரிசக்தி பி... மேலும் பார்க்க

தென் மாநிலங்களின் குரலை நசுக்கத் திட்டமிடுகிறது மத்திய பாஜக அரசு: கனிமொழி

தொகுதி மறுசீரமைப்பு மூலமாக தென் மாநிலங்களின் குரலை மத்திய பாஜக அரசு நசுக்கத் திட்டமிடுகிறது என திமுக எம்.பி. கனிமொழி கூறியுள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், "இந்தியாவின் அடிப்படை கூட்டாட... மேலும் பார்க்க

ஆசிரியரைக் குறிவைத்து வேதியல் குண்டு வைத்த 8-ம் வகுப்பு மாணவர்கள் கைது!

சத்தீஸ்கர் மாநிலத்தில் பள்ளிக்கூட கழிப்பறையில் ஆசிரியரைக் குறிவைத்து வேதியல் வெடிகுண்டு வைத்த மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.பிளாஸ்பூர் மாவட்டத்திலுள்ள தனியார் பள்ளிக்கூடத்தின் கழிப்பறையில் கடந்த ப... மேலும் பார்க்க