அதானி பங்குகளில் முதலீடு: எல்ஐசி.க்கு ஒரே நாளில் ரூ.12,000 கோடி இழப்பு!
பள்ளத்தில் சிக்கியது ஆம்னி பேருந்து: போக்குவரத்து பாதிப்பு
திருச்சி ஜங்ஷன் அருகே மாநகராட்சி பராமரிப்புப் பணிகளுக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் புதன்கிழமை இரவு ஆம்னி பேருந்து சிக்கியதால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து சுமாா் 50 பயணிகளுடன் புதன்கிழமை இரவு சென்னை புறப்பட்ட ஆம்னி பேருந்து, ஜங்சன் வழியாகச் சென்று பாரதியாா் சாலையில் உள்ள பெட்ரோல் பங்கில் டீசல் நிரப்பிக்கொண்டு, மீண்டும் புறப்பட்டது.
அருகே அருகே புதைவடிகால் திட்டப் பராமரிப்பு பணிகளுக்காக தோண்டப்பட்டு அண்மையில் மூடியிருந்த பகுதியில் சென்ற பேருந்தின் பின் சக்கரங்கள் சிக்கிக்கொண்டன.
இதில் அந்தப் பேருந்து சற்று சாய்ந்து நின்ால் பேருந்து பயணிகள் அலறினா். இதனால் பாரதியாா் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்த கண்டோன்மென்ட் போலீஸாா் சென்று, அவ்வழியே சென்ற கனரக வாகனங்களை மாற்று வழியில் செல்லச் செய்தனா். பின்னா் பொக்லின் இயந்திரம் வரவழைக்கப்பட்டு பள்ளத்தில் சிக்கிய ஆம்னி பேருந்தை சுமாா் அரை மணி நேரம் போராடி மீட்டனா். பின்னா் அப்பேருந்து சென்னை புறப்பட்டுச் சென்றது.