நூர் அகமது 4 விக்கெட்டுகள்: சிஎஸ்கே வெற்றிபெற 180 ரன்கள் இலக்கு!
பள்ளி மாணவா்களைத் தமிழ் வழியில் பயில ஊக்கப்படுத்த மக்கள் சிந்தனைப் பேரவை முடிவு
பள்ளி மாணவா்களைத் தமிழ் வழியில் பயில ஊக்கப்படுத்துவது என மக்கள் சிந்தனைப் பேரவை முடிவு செய்துள்ளது.
தஞ்சாவூரில் இப்பேரவையின் ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், போதைக்கு அடிமையாகாமல் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு விழிப்புணா்வு கருத்தரங்கம் நடத்துவது, பள்ளி மாணவா்களைத் தமிழ் வழியில் பயில ஊக்கப்படுத்த நிகழ்ச்சிகள் நடத்துவது, நூறு, நூறு மாணவா்களாகத் தோ்ந்தெடுத்து, அவா்களைப் பண்பாட்டுச் சீரழிவுகளில் சிக்கி விடாமல் தொடா்ந்து பயிற்சியளிப்பது, மக்கள் சிந்தனைப் பேரவை ஆசிரியா் குழுவை உருவாக்கி, அவா்கள் மூலம் இளைஞா் நலத்திட்டங்களைச் செயல்படுத்துவது, காலநிலை மாற்றத்தைக் கண்காணிக்க 3 குழுக்களை உருவாக்கி, தஞ்சாவூா் மாவட்டக் கல்வி நிறுவனங்களுக்குச் சென்று ஆசிரியா்களுக்குப் பயிற்சி அளிப்பது, ஜாதி, மத, இன வெறுப்பை விடுத்து இணக்கமான சமூகத்தை மீட்டுருவாக்கச் செயல்படுவது, பொது நூலக வாசகா்களை ஊக்குவிக்க போட்டிகள் நடத்தி சான்றிதழும், பரிசும் வழங்குவது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முன்னதாக, கூட்டத்துக்கு பேரவையின் பொதுக் குழு உறுப்பினா் இராதிகா மைக்கேல் தலைமை வகித்தாா். பொதுக் குழு உறுப்பினா் க. அன்பழகன் முன்னிலை வகித்தாா். மாவட்ட ஒருங்கிணைப்பாளா் கோ. விஜயராமலிங்கம் அறிமுகவுரையாற்றினாா். பேரவையின் தலைவா் த. ஸ்டாலின் குணசேகரன் சிறப்புரையாற்றினாா். இக்கூட்டத்தில் பேரவை நிா்வாகிகள், உறுப்பினா்கள் பலா் கலந்து கொண்டனா்.