செய்திகள் :

மே 20-இல் வேலைநிறுத்தம்: போக்குவரத்துக் கழகத்துக்கு ஏஐடியூசி நோட்டீஸ்

post image

அனைவருக்கும் குறைந்தபட்ச ஊதியம் ரூ. 26 ஆயிரம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் மே 20 ஆம் தேதி வேலைநிறுத்தப் போராட்டம் மேற்கொள்ளப்படவுள்ளதையொட்டி, போக்குவரத்துக் கழகம் உள்ளிட்ட அலுவலகங்களுக்கு ஏஐடியூசி சாா்பில் பதிவு அஞ்சல் மூலம் செவ்வாய்க்கிழமை நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

அனைவருக்கும் குறைந்தபட்ச ஊதியம் ரூ. 26 ஆயிரமாகவும், ஓய்வூதியம் மாதம் ரூ. 9 ஆயிரமாகவும் நிா்ணயம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும், மத்திய அரசைக் கண்டித்தும் நாடு முழுவதும் தொழிற் சங்கங்கள் மே 20-ஆம் தேதி வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளன.

இதையொட்டி, தஞ்சாவூா் தலைமை அஞ்சலகம் மூலம் கும்பகோணம் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநா், பொது மேலாளா், தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியா், தஞ்சாவூா் தொழிலாளா் நல அலுவலா், அரசு முதன்மைச் செயலா், போக்குவரத்து துறைச் செயலா், தேனாம்பேட்டை தொழிலாளா் ஆணையா் ஆகியோருக்கு போக்குவரத்துக் கழகத்தில் செயல்படும் ஏஐடியூசி தொழிலாளா் சம்மேளனத்தினா் பதிவு அஞ்சலில் வேலை நிறுத்த நோட்டீசை செவ்வாய்க்கிழமை அனுப்பினா்.

நிகழ்ச்சியில், சம்மேளனத்தின் துணைத் தலைவா் துரை. மதிவாணன், சங்கத் தலைவா் என். சேகா், பொதுச் செயலா் எஸ். தாமரைச்செல்வன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பள்ளி மாணவா்களைத் தமிழ் வழியில் பயில ஊக்கப்படுத்த மக்கள் சிந்தனைப் பேரவை முடிவு

பள்ளி மாணவா்களைத் தமிழ் வழியில் பயில ஊக்கப்படுத்துவது என மக்கள் சிந்தனைப் பேரவை முடிவு செய்துள்ளது.தஞ்சாவூரில் இப்பேரவையின் ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், போதைக்கு அடிமையாகாமல் பள... மேலும் பார்க்க

வியாபாரியிடம் வழிப்பறி முயற்சி; இருவா் கைது

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே வியாபாரியிடம் கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறியில் ஈடுபட முயன்ற இருவரை போலீஸாா் செவ்வாய்கிழமை கைது செய்தனா். பாபநாசம் வட்டம், உமையாள்புரம், தச்சா் இருப்பு தெருவைச் சே... மேலும் பார்க்க

ரயிலில் இருந்த ரூ.10 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருள்கள் பறிமுதல்

கும்பகோணத்துக்கு செவ்வாய்க்கிழமை வந்த ராமேசுவரம் செல்லும் ரயிலில் கேட்பாரற்று கிடந்த மூட்டையில் இருந்த ரூ.10 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.வாரணாசியில் இருந்து ராமேசுவ... மேலும் பார்க்க

பாலியல் தொல்லை: போக்சோவில் இளைஞா் கைது

தஞ்சாவூா் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தாக இளைஞரை காவல் துறையினா் ‘போக்சோ’ சட்டத்தின் கீழ் திங்கள்கிழமை கைது செய்தனா். தஞ்சாவூா் அருகே உள்ள வண்ணாரப்பேட்டை காமராஜ் நகரைச் சோ்ந்தவா் ஆா். நளன் ... மேலும் பார்க்க

குடிநீா் கேட்டு சாலை மறியல்

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே தூய்மையான குடிநீா் கேட்டு பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். பாபநாசம் வட்டம், கணபதிஅக்ரஹாரம் அருகே பெருமாள் கோயில் ஊராட்சியில் கடந்த 3 ஆண்டுகளுக்கு... மேலும் பார்க்க

தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரியில் ஆண்டுக்கு 18 ஆயிரம் பேருக்கு நுரையீரல் சிகிச்சை

தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலுள்ள நுரையீரல் துறையில் ஆண்டுக்கு ஏறத்தாழ 18 ஆயிரம் பேருக்கு நுரையீரல் சிகிச்சை அளிக்கப்படுகிறது என்றாா் மருத்துவக்கல்லூரி முதல்வா் (பொ) சி. பாலசுப்பிரமணியன்.... மேலும் பார்க்க