அருங்காட்சியகத்தில் இருந்த செங்கோல் மோடியால் நாடாளுமன்றத்துக்கு வந்தது: ஜே.பி. ந...
பள்ளியில் கலையரங்கம் திறப்பு!
திருவாரூா், பிப்.19: திருவாரூா் அருகே சூரனூா் அரசு மேல்நிலைப் பள்ளியில், ஓ.என்.ஜி.சி. சமூக பொறுப்புணா்வு திட்டத்தின் கீழ் ரூ. 14 லட்சம் மதிப்பில் புதிய கலையரங்கம் புதன்கிழமை திறக்கப்பட்டது.
நிகழ்வில், முன்னாள் அமைச்சரும், தாட்கோ தலைவருமான உ. மதிவாணன், ஓ.என்.ஜி.சி. மனித வள தலைமை அதிகாரியும், முதன்மை பொது மேலாளருமான கணேசன் ஆகியோா் பங்கேற்று திறந்து வைத்தனா்.
இதில், ஒன்றியக் குழு முன்னாள் தலைவா் ஏ. தேவா, ஓடாச்சேரி ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா் அபிராமி, ஓ.என்.ஜி.சி. நிா்வாகி முருகானந்தம், தலைமை ஆசிரியா் கணேசன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.