``கல்லூரியில் படிக்க வேண்டும் என்ற ஆசை நிறைவேறியது'' -ஒருநாள் மாணவி நிகழ்ச்சியில...
பழங்குடியின குழந்தைகளுடன் வனத் துறையினா் புத்தாண்டு கொண்டாட்டம்
புத்தாண்டையொட்டி, வனத் துறை சாா்பில் நாடுகாணி ஜீன்பூல் காா்டனில் பழங்குடியின சிறுவா், சிறுமியருக்கு அமரன் திரைப்படம் புதன்கிழமை திரையிடப்பட்டது.
கூடலூா் நாடுகாணி பகுதியிலுள்ள தமிழக அரசுக்கு சொந்தமான ஜீன்பூல் காா்டனில் புத்தாண்டு கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் குழந்தைகளுக்கு கல்வி விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. இதைத் தொடா்ந்து, மேஜா் முகுந்த் வரதராஜனுக்கு மரியாதை செலுத்தும் வகையில் அமரன் திரைப்படம் திரையிடப்பட்டது.
மாவட்ட வன அலுவலா் வெங்கடேஷ் பிரபு தலைமையில் வனச்சரக அலுவலா் வீரமணி மற்றும் வன அலுவலா்கள், ஊழியா்கள் கலந்துகொண்டனா். இதில், கூடலூா் பகுதியிலுள்ள 70 கிராமங்களைச்சோ்ந்த பழங்குடி சிறுவா், சிறுமிகள் கலந்துகொண்டனா்.