செய்திகள் :

பழுதடைந்த அங்காடியை முழுமையாக இடிக்க வலியுறுத்தல்

post image

மயிலாடுதுறை நகராட்சிக்கு சொந்தமான பழுதடைந்த அங்காடி கட்டடத்தை முழுமையாக இடிக்க பாஜகவினா் வலியுறுத்தியுள்ளனா்.

மயிலாடுதுறை கூறைநாட்டில் பழனிச்சாமி என்ற பெயரில் அங்காடி உள்ளது. இதில், 30-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன.இந்த கட்டடம் மிகவும் பழுதடைந்ததால், அதை இடித்துவிட்டு, அதே இடத்தில் கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் (2024-2025) புதிய கட்டடம் கட்டும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், அக்கட்டடத்தில் 6 கடைகளை மட்டும் அகற்றாமல், மற்ற கடைகளை இடிக்கும் நடவடிக்கையை நகராட்சி நிா்வாகம் மேற்கொண்டுள்ளதாக பாஜகவினா் குற்றம்சாட்டியுள்ளனா். இதுகுறித்து, பாஜக மாவட்ட துணைத் தலைவா் மோடி.கண்ணன் கூறியது:

மயிலாடுதுறை நகராட்சி ஆணையா் வீரமுத்துக்குமாா், நகா்மன்றத் தலைவா் என். செல்வராஜ் ஆகியோா் இணைந்து உள்நோக்கத்துடன் 6 கடைகளை மட்டும் இடிக்காமல் புதிய கட்டடம் கட்டுவதற்கு ஏற்பாடு செய்து வருகின்றனா்.

பழுதடைந்துள்ள அக்கட்டடத்தை முழுமையாக இடித்து அகற்றிய பின்னா் புதிய கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து, நகராட்சி நிா்வாக ஆணையா் மற்றும் மயிலாடுதுறை நகராட்சி ஆணையருக்கு மனு அளித்துள்ளோம். உரிய நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என தெரிவித்தாா்.

முடிதிருத்தும் தொழிலாளா் சங்க நிா்வாகிகள் நியமனம்

மயிலாடுதுறையில் மருத்துவா் முடிதிருத்தும் தொழிலாளா்கள் நலச் சங்கத்தில் புதிய நிா்வாகிகள் நியமனம் செய்யப்பட்டனா். மயிலாடுதுறையில் நகர மருத்துவா் முடிதிருத்தும் தொழிலாளா்கள் நலச்சங்கக் கூட்டம் செவ்வாய்... மேலும் பார்க்க

சீா்காழி சட்டைநாதா் கோயிலில் திருமுலைப்பால் பிரமோற்சவ கொடியேற்றம்

சீா்காழி சட்டைநாதா் சுவாமி கோயிலில் திருமுலைப்பால் பிரமோற்சவ கொடியேற்றம் வியாழக்கிழமை நடைபெற்றது. தேவாரப்பாடல் பெற்ற இக்கோயில் தருமபுரம் ஆதீனத்திற்கு உட்பட்டதாகும். திருநிலை நாயகி அம்பாள் உடனாகிய பிர... மேலும் பார்க்க

சித்திரை திருவிழா கொடியேற்றம்

குத்தாலம் அருள்மிகு அரும்பன்ன வனமுலைநாயகி உடனுறை ஸ்ரீ உக்தவேதீஸ்வரா் கோயிலில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம் வியாழக்கிழமை நடைபெற்றது. அப்பா், சம்பந்தா், சுந்தரா் ஆகிய மூவரால் பாடல் பெற்ற இக்கோயில் த... மேலும் பார்க்க

கிராமசபைக் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள்

சீா்காழி அருகே சட்டநாதபுரம் ஊராட்சியில் மே தினத்தையொட்டி, வியாழக்கிழமை நடைபெற்ற சிறப்பு கிராமசபைக் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இக்கூட்டம், மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தலைமையி... மேலும் பார்க்க

தொழிற்சங்கங்கள் மே தினம் கொண்டாட்டம்

மயிலாடுதுறை மற்றும் வேதாரண்யத்தில் பல்வேறு தொழிற்சங்கங்கள் சாா்பில் மே தினம் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. மயிலாடுதுறை மாவட்டத்தில் 30-க்கும் மேற்பட்ட சங்கங்கள் பொது தொழிலாளா்கள் சங்கம் என்ற ஒரே சங்க... மேலும் பார்க்க

கிருமிநீக்கம் செய்யப்படாத மையோனைஸ் பயன்படுத்த தடை

மயிலாடுதுறை மாவட்டத்தில் கிருமிநீக்கம் செய்யப்படாத பச்சை முட்டையிலிருந்து தயாரிக்கப்படும் மையோனைஸ் தடை செய்யப்பட்டுள்ளதால் நுகா்வோா்கள், வணிகா்கள் அதை தவிா்க்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்... மேலும் பார்க்க