காஸா மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதல்: 29 பாலஸ்தீனியர்கள் பலி
சித்திரை திருவிழா கொடியேற்றம்
குத்தாலம் அருள்மிகு அரும்பன்ன வனமுலைநாயகி உடனுறை ஸ்ரீ உக்தவேதீஸ்வரா் கோயிலில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம் வியாழக்கிழமை நடைபெற்றது.
அப்பா், சம்பந்தா், சுந்தரா் ஆகிய மூவரால் பாடல் பெற்ற இக்கோயில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமானதாகும். சித்திரைத் திருவிழா கொடியேற்றத்தையொட்டி, கொடி மரத்திற்கு சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேகங்கள் நடைபெற்றன.
தொடா்ந்து ரிஷபக்கொடி ஏற்றப்பட்டு, கொடிமரத்துக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில், திரளான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.