செய்திகள் :

"பாகிஸ்தான் ராணுவ தளபதிக்கு நன்றி தெரிவிக்க விரும்பினேன்" - காரணம் சொல்லும் ட்ரம்ப்

post image

நேற்று காலை, பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ட்ரம்பிடம் 35 நிமிடம் தொலைபேசியில் பேசியதாக இந்திய வெளியுறவுத் துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்திருந்தார்.

அந்தத் தொலைபேசி அழைப்பில் மோடி ட்ரம்பிடம், 'இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்த தாக்குதல் நிறுத்தத்தில் அமெரிக்கா மத்தியஸ்தம் செய்யவில்லை. எந்தவொரு நாட்டின் மத்தியஸ்தையும் இந்தியா ஏற்றதில்லை... இனியும் ஏற்காது' என்று தெளிவுப்படுத்தியதாகக் கூறப்பட்டது.

இருந்தும், நேற்று இரவு ட்ரம்ப், தான் முன்பு கூறியதையே கூறியிருக்கிறார். அதாவது, 'நான் தான் போரை நிறுத்தினேன்' என்று மீண்டும் கூறியிருக்கிறார்.

மோடி, ட்ரம்ப்
மோடி, ட்ரம்ப்

இது ஒரு பக்கம் இருக்க... நேற்று பிற்பகல் (அமெரிக்க நேரப்படி) பாகிஸ்தான் ராணுவத் தளபதி அசிம் முனீருக்கு வெள்ளை மாளிகையில் விருந்து வைத்துள்ளார் ட்ரம்ப்.

இந்த சந்திப்பு குறித்து ட்ரம்ப், "போருக்குச் செல்லாமல் தாக்குதலை நிறுத்தியதற்கு அசிம் முனீருக்கு நான் நன்றி தெரிவிக்க விரும்பினேன். அது தான் நான் அவரை சந்தித்ததற்கான காரணம். நாங்கள் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே வர்த்தக ஒப்பந்தத்தை மேற்கொள்ள உள்ளோம். எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. இரண்டு ஸ்மார்ட் நபர்கள் போர் வேண்டாம் என்று முடிவு எடுத்தனர். இரு நாடுகளுமே மிகப்பெரிய அணு சக்தி நாடுகள். அசிம் முனீரை இன்று பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி" என்று கூறியுள்ளார்.

சகோதரியிடமே மோசடி; அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சரின் மகன் - பின்னணி என்ன?!

அ.தி.மு.க முன்னாள் அமைச்சரும் தூத்துக்குடி தெற்கு மாவட்ட அ.தி.மு.க செயலாளருமான எஸ்.பி.சண்முகநாதனின் மகன் ராஜா. இவர், தூத்துக்குடி மில்லர்புரத்தை முகவரியாக கொண்டுள்ள நிலையில், குடும்பத்தில் ஏற்பட்ட சொத... மேலும் பார்க்க

'மிட்நைட் விசாரணை, மாட்டிவிட்ட மகேஸ்வரி, திகிலில் பூவை ஜெகன்மூர்த்தி' - ஜெயராம் | Elangovan Explains

சிறுவன் கடத்தல் விவகாரம், இதில் ஏடிஜிபி ஜெயராம் எப்படி சம்மந்தப்பட்டார், யாரந்த மகேஸ்வரி, காதல் திருமணம் செய்த பெண்ணின் அப்பா வனராஜா பின்னணி. முக்கியமாக மகேஸ்வரி மூலமாக ஜெயராம் தொடர்பு எடுத்து அவர் மூ... மேலும் பார்க்க

G7 மாநாடு: பாதியில் கிளம்பிய TRUMP - போனில் பேசிய MODI | Israel - Iran War|Imperfect Show 18.6.2025

* Iron Dome-ஐ தாண்டி இஸ்ரேலை தாக்கும் ஏவுகணையை இரான் உருவாக்கியது எப்படி? * 'UNCONDITIONAL’ SURRENDER' - ட்ரம்ப் பதிவுக்கு பின்னால்? * G7 மாநாடு: பாதியில் நாடு திரும்பிய ட்ரம்ப்? * இஸ்ரேலுடன் இணைந்து ... மேலும் பார்க்க

Vijay-யுடன் ADMK கூட்டணி பேச்சுவார்த்தை நடக்கிறதா? | K.T.Rajendra Balaji Exclusive Interview | TVK

எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக வேண்டும், அ.தி.மு.க மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்று வேண்டுதலோடு திடீர் தியானத்தில் ஈடுபட்டு அரசியல் களத்தில் கவனம் ஈர்த்துள்ளார் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ராஜேந... மேலும் பார்க்க