செய்திகள் :

சகோதரியிடமே மோசடி; அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சரின் மகன் - பின்னணி என்ன?!

post image

அ.தி.மு.க முன்னாள் அமைச்சரும் தூத்துக்குடி தெற்கு மாவட்ட அ.தி.மு.க செயலாளருமான எஸ்.பி.சண்முகநாதனின் மகன் ராஜா. இவர், தூத்துக்குடி மில்லர்புரத்தை முகவரியாக கொண்டுள்ள நிலையில், குடும்பத்தில் ஏற்பட்ட சொத்து பிரச்னை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தற்போது சென்னையில் குடியிருந்து வருகிறார்.

59வது வார்டு கவுன்சிலரான இவர், சென்னையில் வசிப்பதால் தூத்துக்குடி மாநகராட்சி மாமன்றக் கூட்டங்களில் கலந்து கொள்வதில்லை என்கிற பொதுமக்களின் குற்றச்சாட்டுகளும் உள்ளன.

சண்முகநாதன்

சகோதரியின் புகார்!

இந்த நிலையில், சென்னையில் தான் புதிதாக தொடங்கவுள்ள தொழில் நிறுவனத்தில் பங்குதாரராக சேர்ப்பதாக கூறி தனது சகோதரியான பொன்னரசி என்பவரிடம் ரூ.17 கோடியை கடனாக பெற்றதாகவும், மேலும் பணம் பெற்று முறையாக பங்குதாரராக சேர்க்காமல் மற்றும் உரிய பணத்தை திரும்ப வழங்காததால் சென்னை பெருநகர மத்திய குற்றப்பிரிவில் புகார் மனு அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ரூ.17 கோடி மோசடி செய்ததாக ராஜா மற்றும் அவரது மனைவி அனுஷா மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

தலைமறைவு

போலீஸார் தன்னை தேடுவதை அறிந்த ராஜா தலைமறைவாக இருந்தார். அதே நேரத்தில் அவரும் அவரது மனைவியும் வெளிநாடு செல்லக்கூடும் என்பதால் அனைத்து விமான நிலையங்களுக்கும் லுக் அவுட் நோட்டீஸ் மத்திய குற்றப்பிரிவு போலீஸார் சார்பில் அளிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் மலேசியாவிற்கு தப்பிச் செல்வதற்காக சென்னை விமான நிலையம் வந்த ராஜாவின் பாஸ்போர்ட்டை விமான நிலைய அதிகாரி ஆய்வு செய்தபோது அவர் மீது ஏற்கெனவே லுக் அவுட் நோட்டீஸ் விடுக்கப்பட்டிருந்தது தெரிந்தது.

எடப்பாடி பழனிசாமியுடன் ராஜா

நீக்கம்

இதனையடுத்து விமான நிலைய அதிகாரிகள் மத்திய குற்றப்பிரிவு போலீஸாருக்கு தகவல் கூறியதன் அடிப்படையில் சென்னை பெருநகர மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதனையடுத்து கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்படுவதாக அ.தி.மு.கவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

இதுகுறித்து உள்ளூர் அதிமுக நிர்வாகிகளிடம் பேசினோம், “சண்முகநாதனின் மகன்தான் ராஜா. சண்முகநாதனின் அனைத்து தொழில்களையும் இவரே கவனித்து வந்தார். மாற்று சமூக பெண்ணுடன் அவருக்கு காதல் ஏற்பட்டுள்ளது. இந்த காதல் விவகாரம் சண்முகநாதனுக்கு தெரிய வந்ததும் மகனை கண்டித்தார். காதலை கைவிடுமாறு கூறி பெண் பார்க்கத் தொடங்கினார். இந்த நிலையில், ராஜா தான் காதலித்து வந்த பெண்ணுடன் பதிவுத்திருமணம் செய்து கொண்டார். இந்த விவகாரம் குடும்பத்திற்குள் பூதாகரமாக வெடித்தது. இந்த நிலையில்தான் தனியாக தொழில் தொடங்குவதற்காக ராஜா, தனது அக்கா பொன்னரசியிடம் பணம் வாங்கியுள்ளார்.

கட்சியினருடன் ராஜா

அவரது நிறுவனத்தில் முதலீடு செய்தால் 16% பங்கு தருவதாகச் சொல்லி, பொன்னரசியின் கணவருக்கு சொந்தமான ஸ்ரீபெரும்புதூரில் உள்ள 2 ஏக்கர் நில பத்திரங்களை அடமானமாக வைத்து வங்கியில் ரூ.11 கோடி கடன் பெற்றுள்ளார். அந்த பணத்தை அக்காவிற்கு தெரியாமல் வேறொரு நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளார். தூத்துக்குடியில் கல்குவாரியில் முதலீடு செய்வதாக கூறி 300 சவரன் தங்கநகையையும் வாங்கிக் கொண்டு சுமார் 40 ஏக்கர் நிலத்தை தன் பெயரில் முடித்துக் கொண்டார். இப்படி பல மோசடிகளில் ஈடுபட்டுள்ளார். ராஜா  கைது செய்யப்பட்டுள்ளதால் அவர் வகித்து வரும் மாமன்ற உறுப்பினர் பதவிக்கும் ஆபத்து வந்துள்ளது” என்றனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

``ஆங்கிலம் பேசுபவர்கள் விரைவில் வெட்கப்படும் சூழல் வரும்" - மத்திய அமைச்சர் அமித் ஷா

டெல்லியில் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி அசுதோஷ் அக்னிஹோத்ரி எழுதிய 'மெயின் பூந்த் சுயம், குத் சாகர் ஹூன்' என்ற புத்தக வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்துக... மேலும் பார்க்க

Ramadoss: "பாமக பிரச்னைக்குக் காரணம் திமுக-வா?" - அன்புமணி குற்றச்சாட்டுக்கு ராமதாஸின் பதில் என்ன?

பாமக-வில் கடந்த சில மாதங்களாகவே, கட்சி அதிகாரத்தில் நிறுவனர் ராமதாஸுக்கும், தலைவர் அன்புமணி ராமதாஸுக்கும் இடையே வார்த்தைப் போர் நிலவுகிறது.குறிப்பாக, "தமிழகம் முழுவதும் கிராமம் கிராமமாகச் சென்று இந்தக... மேலும் பார்க்க

'மிட்நைட் விசாரணை, மாட்டிவிட்ட மகேஸ்வரி, திகிலில் பூவை ஜெகன்மூர்த்தி' - ஜெயராம் | Elangovan Explains

சிறுவன் கடத்தல் விவகாரம், இதில் ஏடிஜிபி ஜெயராம் எப்படி சம்மந்தப்பட்டார், யாரந்த மகேஸ்வரி, காதல் திருமணம் செய்த பெண்ணின் அப்பா வனராஜா பின்னணி. முக்கியமாக மகேஸ்வரி மூலமாக ஜெயராம் தொடர்பு எடுத்து அவர் மூ... மேலும் பார்க்க

G7 மாநாடு: பாதியில் கிளம்பிய TRUMP - போனில் பேசிய MODI | Israel - Iran War|Imperfect Show 18.6.2025

* Iron Dome-ஐ தாண்டி இஸ்ரேலை தாக்கும் ஏவுகணையை இரான் உருவாக்கியது எப்படி? * 'UNCONDITIONAL’ SURRENDER' - ட்ரம்ப் பதிவுக்கு பின்னால்? * G7 மாநாடு: பாதியில் நாடு திரும்பிய ட்ரம்ப்? * இஸ்ரேலுடன் இணைந்து ... மேலும் பார்க்க