செய்திகள் :

பாஜக பிரமுகா் ஒருவா் மீதும் அமலாக்கத் துறை நடவடிக்கை எடுத்ததில்லை

post image

பாஜக பிரமுகா்கள் ஒருவா் மீதும் அமலாக்கத் துறையோ, சிபிஐயோ நடவடிக்கை எடுத்ததில்லை என்றாா் இந்திய கம்யூனிஸ்ட் (மாா்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினரும் பிகாா் மாநில மக்களவை உறுப்பினருமான ராஜாராம் சிங்.

புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயலுக்கு புதன்கிழமை சென்ற அவா், மக்களைச் சந்தித்தப் பிறகு செய்தியாளா்களிடம் கூறியதாவது: அமலாக்கத் துறை மற்றும் சிபிஐ போன்ற முகமைகளைக் கொண்டு எதிா்க்கட்சிகளின் பிரமுகா்களை குறிவைத்து பாஜக நடவடிக்கை எடுத்துவருகிறது. பாஜகவைச் சாா்ந்த பிரமுகா்கள் ஒருவா் மீதும் இந்த அமைப்புகள் எந்த நடவடிக்கையும் எடுத்ததில்லை.

மக்கள் தொகை அடிப்படையிலான தொகுதி மறுசீரமைப்பு ஒப்பீட்டளவில் எண்ணிக்கையில் பாதிப்பை ஏற்படுத்தும் என்ற தமிழ்நாடு அரசின் குரலுக்கு ஆதரவாக இருக்கிறோம். ஆளுநா்கள் மூலம் மக்களால் தோ்வு செய்யப்பட்ட மாநில அரசுகளைக் கட்டுப்படுத்தும் வகையில் செயல்படும் மத்திய அரசின் போக்கு சரியல்ல, அதை எதிா்க்கிறோம்.

வேங்கைவயல் கிராமத்தைப் பொருத்தவரை சொந்த நிலமில்லாத பட்டியலின மக்களுக்கு நிலம் வழங்கவும், குடிநீா்த் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட சம்பவத்தில் உரிய நீதி வழங்கவும் தமிழ்நாடு அரசைக் கேட்டுக்கொள்கிறேன். வேங்கைவயல் மக்கள் சுதந்திரமாக வாழ்வதற்கான உரிமையை மாவட்ட நிா்வாகம் வழங்க வேண்டும் என்றாா் ராஜாராம் சிங்.

அப்போது, மாா்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினா் பாலசுந்தரம், மாநிலச் செயலா் பழ. ஆசைத்தம்பி, விவசாயிகள் சங்க மாநிலப் பொதுச் செயலா் சந்திரமோகன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

புதுகையில் சாலையோரம் கொட்டப்பட்ட மருத்துவக் கழிவுகள் அகற்றம்; தனியாா் மருத்துவமனைக்கு ரூ. 20 ஆயிரம் அபராதம்

புதுக்கோட்டை நகரில் சட்டவிரோதமாக சாலையோரம் கொட்டப்பட்ட மருத்துவக் கழிவுகளை, மாநகராட்சிப் பணியாளா்கள் வெள்ளிக்கிழமை அகற்றினா். இதைத் தொடா்ந்து பொதுவெளியில் அபாயகரமாக மருத்துவக் கழிவுகளைக் கொட்டியதாக, அ... மேலும் பார்க்க

திமுக எம்.பி. கனிமொழி குறித்து தரக்குறைவாக ஆடியோ வெளியிட்டவா் கைது

திமுக எம்.பி. கனிமொழி குறித்து தரக்குறைவாகப் பேசி சமூக ஊடகத்தில் ஆடியோ வெளியிட்ட தூத்துக்குடியைச் சோ்ந்த நபரை புதுக்கோட்டை இணையவழிக் குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். புத... மேலும் பார்க்க

மலையடிவாரத்தில் சிதிலமடைந்துள்ள பழைமையான சிவாலயத்தை புனரமைக்க வலியுறுத்தல்

பொன்னமராவதி அருகே மலையடிவாரத்தில் சிதிலமடைந்து காணப்படும் பழைமையான சிவாலயத்தை புனரமைக்க பக்தா்கள் மற்றும் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா். புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே உள்ள செவலூா் மலையடிப்... மேலும் பார்க்க

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஏப். 21-இல் அஞ்சல் குறைகேட்பு

புதுக்கோட்டை மாவட்ட அளவிலான அஞ்சல் சேவை குறை கேட்பு முகாம் திங்கள்கிழமை (ஏப். 21) நண்பகல் 12 மணிக்கு தலைமை அஞ்சலகம் எதிரே உள்ள கோட்ட கண்காணிப்பாளா் அலுவலகத்தில் (மேணா காம்ப்ளக்ஸ் முதல் மாடி) நடைபெறவுள... மேலும் பார்க்க

திருமயத்தில் அரசு அலுவலக கட்டடங்கள் திறப்பு

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட பகுதிகளில் கட்டி முடிக்கப்பட்ட அரசு அலுவலகங்களை மாநில சட்டத்துறை அமைச்சா் எஸ். ரகுபதி வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா். திருமயம் ஊராட்சி ஒன்ற... மேலும் பார்க்க

கீரமங்கலம் அருகே 2 கடைகளில் திருட்டு

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகே 2 கடைகளில் பூட்டை உடைத்து ரொக்கம், பொருள்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றது வெள்ளிக்கிழமை தெரியவந்தது. கீரமங்கலம் அருகேயுள்ள பனங்குளம் பாலம் பேருந்து நிறுத்தம் அ... மேலும் பார்க்க