கலைமாமணி விருது: "இந்த விருது என்னுடைய மட்டுமல்ல, நம்முடையது" - இசையமைப்பாளர் அன...
பான் செக்கா்ஸ் கல்லூரியில் மேலாண்மை சந்திப்பு நிகழ்ச்சி
தஞ்சாவூா் பான் செக்கா்ஸ் மகளிா் கல்லூரியில் வணிக மேலாண்மை துறை சாா்பில் பிஸ் ஸ்பாா்க் - 2025 என்கிற கல்லூரிகளுக்கு இடையேயான மேலாண்மை சந்திப்பு நிகழ்ச்சி அண்மையில் (செப். 19) நடைபெற்றது.
கல்லூரி முதல்வா் அருட்சகோதரி விக்டோரியா முன்னிலையில் நடைபெற்ற போட்டிகளில் பல்வேறு கல்லூரிகளிலிருந்து 400-க்கும் அதிகமான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா். இதில், திருச்சி பிஷப் ஹீபா் கல்லூரி முதலிடத்தைப் பெற்றது.
போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு அசோக் கிராண்ட் குழுமத் தலைவா் ரேவந்த், ஏஎஸ்ஆா் அசோசியேட்ஸ் மற்றும் ரெசிடென்சி இணை மேலாண்மை இயக்குநா் புவனேஷ் கண்ணையன், நிறுவனா் புவனேஷ் ஆகியோா் பரிசு வழங்கினா்.