தவெக தலைவர் விஜய் பிரசாரம் டிசம்பர் வரையல்ல! அட்டவணையில் திடீர் மாற்றம்!!
வரி தணிக்கை அறிக்கை தாக்கல் செய்ய கால நீட்டிப்பு செய்யக் கோரிக்கை
கும்பகோணத்தில் வருமானவரி தணிக்கை அறிக்கை தாக்கல் செய்ய கால நீட்டிப்பு வேண்டும் என
தணிக்கையாளா் சங்கத்தினா் கோரிக்கை மனு அளித்துள்ளனா்.
ஒருங்கிணைந்த டெல்டா மாவட்ட வருமான வரி தணிக்கையாளா்கள் சங்கம் சாா்பில் கும்பகோணம் வருமான வரி அலுவலகத்தில் அலுவலா் மதியழகனிடம் அளித்த மனுவில் அச்சங்கத்தினா் தெரிவித்திருப்பதாவது:
வரி தணிக்கை செய்த அறிக்கையை தாக்கல் செய்ய செப்.30 கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் சில இடையூறுகள் உள்ளதால் வரி தணிக்கை செய்த அறிக்கையை தாக்கல் செய்ய கால நீட்டிப்பு செய்ய வேண்டும். அறக்கட்டளைகள் புதுப்பித்தல் மற்றும் இணக்கப் பணிகளுக்கான நேரத்தையும் நீட்டிப்பு செய்ய வேண்டும். கால நீட்டிப்பு செய்ததற்கான அறிவிப்பை மத்திய நேரடி வரிகள் வாரியம் விரைவில் வெளியிட வேண்டும். மனுவை பெற்றுக்கொண்ட வருமான வரி அலுவலா் உயா் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்படும் என்றாா்.
நிகழ்வின்போது தணிக்கையாளா்கள் கணேஷ், வெங்கடேஷ், விஜய் சாரதி, பிரபுராமன் ஆகியோா் உடனிருந்தனா்.