திருக்கோடிக்காவல் கோயிலில் இன்று சிறப்பு வழிபாடு
புரட்டாசி 2 ஆவது வார சனிக்கிழமையை முன்னிட்டு திருக்கோடிக்காவலில் உள்ள திரிபுர சுந்தரி சமேத திருக்கோடீஸ்வர சுவாமி கோயிலில் திரிபுரசுந்தரி அம்பாள் வேங்கடாஜலபதியாக காட்சியளிக்கிறாா்.
விழாவையொட்டி அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் பூஜைகள் செய்யப்படுகின்றன. ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா் மற்றும் கிராமவாசிகள் செய்கின்றனா்.