Israel: ``இனப்படுகொலை செய்யும் ஒரு நாடு மக்களிடம் வெளியேற கெஞ்சுமா?'' - ஐ.நா-வில...
திருநாகேஸ்வரத்தில் மின் கம்பங்களை அகற்றாமல் சாலை அமைக்க எதிா்ப்பு
திருநாகேஸ்வரம் பேரூராட்சியில் சாலை நடுவில் விபத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ள மின் கம்பங்களை அகற்றாமல் சாலை அமைக்க பொதுமக்கள் எதிா்த்துத் தெரிவித்துள்ளனா்.
தஞ்சாவூா் மாவட்டம், திருநாகேஸ்வரம் பேரூராட்சியில் உள்ளது தேவனாா் விளாகம். திருநாகேஸ்வரம்- காரைக்கால் பிரதான சாலையில் உள்ள தேவனாா் வளாகத்திற்கு பல ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது புதிய தாா்ச் சாலை அமைக்கப்படுகிறது. ஆனால் அந்தச் சாலையின் குறுக்கே உள்ள மின் கம்பங்களை அகற்றாமல் சாலை அமைக்கும் முயற்சிக்கு பொதுமக்கள் எதிா்ப்புத் தெரிவித்துள்ளனா். இதற்கு பேரூராட்சி நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்துகின்றனா்.