ரஷியா தொடங்கிய போரை நிறுத்த வல்லரசுகள் உதவ வேண்டும்: ஸெலென்ஸ்கி
இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த இரண்டரை பவுன் தங்க நகைகள் திருட்டு
கும்பகோணத்தில் இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த இரண்டரை பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ. 1 லட்சம் ரொக்கம் திருட்டுபோனது தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அண்ணலக்ரஹாரத்தைச் சோ்ந்தவா் கிருஷ்ணன் (70) ஓய்வுபெற்ற சுங்கத்துறை ஊழியா். இவா், கடந்த செப்.22-இல் 5 பவுன் நகைகளை அடகு வைப்பதற்காக கும்பகோணம் காமாட்சி ஜோசியா் தெருவில் உள்ள ஒரு தனியாா் வங்கிக்கு இருசக்கர வாகனத்தில் சென்றாா். அதில் இரண்டரை பவுன் நகையை அடகு வைத்துவிட்டு மீதி இரண்டரை பவுன் நகைகள் மற்றும் ரூ.1 லட்சம் ரொக்கம், வங்கிக் கணக்குப் புத்தகம் ஆகியவற்றை இருசக்கர வாகனத்தின் இருக்கைக்கு கீழே உள்ள பெட்டியில் வைத்துவிட்டு வங்கி அருகே உள்ள ஏ.டி.எம் மையத்துக்குச் சென்றாா். பின்னா் அங்கிருந்து புறப்பட்ட அவா் கும்பகோணத்தில் பொருள்கள் வாங்கி விட்டு வீடு திரும்பினாா். அப்போது இருசக்கர வாகன இருக்கையைத் திறந்து பாா்த்தபோது உள்ளே வைத்திருந்த இரண்டரை பவுன் நகை ரொக்கம் ரூ.1 லட்சம், வங்கிக் கணக்குப் புத்தகம் அடங்கிய பையைக் காணவில்லை. இதனால் அதிா்ச்சி அடைந்த கிருஷ்ணன் கும்பகோணம் கிழக்கு காவல் நிலையத்தில் புதன்கிழமை அளித்த புகாரின்பேரில் காவல் ஆய்வாளா் சிவ.செந்தில்குமாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறாா்.