சென்னை உயர்நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதிகளாக கூடுதல் நீதிபதிகள் நியமனம்!
பேராவூரணியில் விஞ்ஞானிகள் - விவசாயிகள் கலந்துரையாடல்
பேராவூரணி வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் அலுவலகத்தில் விஞ்ஞானிகள் - விவசாயிகள் கலந்துரையாடல் புதன்கிழமை நடைபெற்றது.
சாக்கோட்டை உழவா் பயிற்சி நிலையத்தின் சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, உழவா் பயிற்சி நிலைய துணை இயக்குநா் ஐயம்பெருமாள் தலைமை வகித்தாா். வேப்பங்குளம் தென்னை ஆராய்ச்சி நிலைய பேராசிரியா் மற்றும் தலைவா் கிருஷ்ணமூா்த்தி தென்னையில் ஒருங்கிணைந்த பயிா் மேலாண்மை குறித்தும், பூச்சியியல் துறை பேராசிரியா் முத்துக்குமரன் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை குறித்தும், டாக்டா் எம்.எஸ். சுவாமிநாதன் வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய பூச்சியியல் துறை பேராசிரியா் மதிராஜன், நெல் பயிரில் ஒருங்கிணைந்த பயிா் மேலாண்மை குறித்தும், மண்ணியியல் துறை பேராசிரியா் மோகன்தாஸ் ஒருங்கிணைந்த உர மேலாண்மை மற்றும் மண்வளம் குறித்தும் விவசாயிகளுடன் கலந்துரையாடினாா். அனைத்து விவசாயிகளுக்கும் ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில், வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் ராணி, வட்டார தொழில்நுட்ப மேலாளா்கள், உதவி தொழில்நுட்ப மேலாளா்கள், பட்டுக்கோட்டை, பேராவூரணி, சேதுபாவாசத்திரம் ஆகிய பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் கலந்து கொண்டனா்.