பாமக நிறுவனர் ராமதாஸின் பயோபிக்..! முதல் பார்வை போஸ்டர்!
பாமக நிறுவனர் ராமதாஸ் பிறந்த நாளில் அவரது பயோபிக் படத்தின் முதல்பார்வை போஸ்டர் வெளியாகியுள்ளது.
இயக்குநர் சேரன் இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்துக்கு அய்யா எனப் பெயரிடப்பட்டுள்ளது.
தமிழ் குமரன் புரடக்ஷன்ஸ் சார்பாக ஜி.கே.எம். தமிழ்குமரன் இந்தப் படத்தை தயாரிக்கிறார்.
மருத்துவராக இருந்து அரசியல்வாதியாக மாறிய ராமதாஸ் அவர்களின் பிறந்தநாளில் இந்தப் பட போஸ்டர் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் படத்தில் ஆரி அர்ஜுனன் நடித்துள்ளார். இந்தப் படத்தின் போஸ்டரை வெளியிட்டுள்ள சேரன், “இன விடுதலைக்கான போராட்டத்தின் வரலாறு” எனக் கூறிப்பிட்டுள்ளார்.
மேலும், அந்தப் பதிவில் தமிழ்நாட்டின் சிங்கம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
தமிழில் ஆட்டோகிராஃப், மாயக்கண்ணாடி என்ற அற்புதமான படங்களை இயக்கிய சேரன் இந்தப் படத்தை இயக்கி வருகிறார்.
His voice roared for the voiceless.
— Cheran Pandiyan (@CheranDirector) July 25, 2025
Now, his story roars on the big screen
Presenting the biopic of Dr. #Ramadoss titled #AYYA - #TheLionOfTamilNadu#இனவிடுதலைக்கானபோராட்டத்தின்வரலாறு
@gkmtamilkumaran@Aariarujunan@eka_dop@SundaramurthyKS#Maniraj@ponkathireshpic.twitter.com/sFcu3109IC