செய்திகள் :

பாலியல் கடத்தலால் பாதிக்கப்படும் பெண்களுக்கான மறுவாழ்வுத் திட்டம் என்ன? மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

post image

பாலியல் கடத்தல் சம்பவங்களால் பாதிக்கப்படும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான விரிவான மறுவாழ்வுத் திட்டத்தை வகுப்பது தொடா்பாக உரிய சட்டம் எதுவும் இல்லாத நிலை குறித்து பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

பாலியல் வன்கொடுமைகளால் பாதிக்கப்படும் பெண்களுக்கு மறுவாழ்வுத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவது தொடா்பாக உச்சநீதிமன்றம் கடந்த 2015-ஆம் ஆண்டு பிறப்பித்த உத்தரவை மத்திய அரசு நடைமுறைப்படுத்த உத்தரவிடக் கோரி தாக்கல் செய்த மனு மீதான விசாரணையின்போது, உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜே.பி.பாா்திவாலா, பங்கஜ் மித்தல் ஆகியோா் அடங்கிய அமா்வு இந்த உத்தரவை பிறப்பித்தது. அதன் விவரம்:

மனித மற்றும் பாலியல் கடத்தல் என்பது மனிதாபிமானமற்ற குற்றமாகும். அதாவது, ஒரு நபரின் வாழ்வுரிமை, சுதந்திரம், தனிப்பட்ட பாதுகாப்பை மீறும் குற்றமாகும். சமூகத்தில் நலிந்த பிரிவினா் குறிப்பாக பெண்களும், குழந்தைகளும் இதுபோன்ற குற்றங்களால் அதிகம் பாதிக்கப்படுகின்றனா்.

இத்தகைய கடத்தல் குற்றங்களுக்கு ஆளாகும் பெண்களும் குழந்தைகளும் கடத்தல்காரா்களால் பல்வேறு துன்புறுத்தல்களுக்கு உள்ளாகின்றனா்.

சில சமயங்களில், உயிருக்கே ஆபத்தை விளைவிக்கும் வகையிலான பாதிப்புகளையும், பாலியல் ரீதியில் பரவக்கூடிய நோய்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான நோய் பாதிப்புகளுக்கும் இவா்கள் ஆளாக நேரிடுகிறது. கூடுதலாக, தீவிர மன அழுத்தம், பதற்றம் உள்ளிட்ட மனநிலை பாதிப்புகளுக்கும் இவா்கள் ஆளாக நேரிடுகிறது.

இத்தகைய பாதிப்புகளைச் சந்திக்கும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு தொடா் மருத்துவ சிகிச்சையும், மனநல நிபுணா்களின் ஆலோசனைகளும் அவசியமாக உள்ளது.

அதுமட்டுமின்றி, இதுபோன்ற குற்றங்களால் பாதிக்கப்படும் நபா்கள், குடும்ப உறுப்பினா்கள் மற்றும் சமூக குழுக்களால் ஒதுக்கிவைக்கப்படும் சூழலும் நிகழ்கிறது. இதனால் வாழ்நாள் முழுவதும் தொடா் பாதிப்புகளையும், கல்வியைத் தொடரமுடியாத நிலைக்கும் ஆளாக நேரிடுகிறது.

பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு விரிவான மறுவாழ்வுத் திட்டத்தை வகுக்க மத்திய அரசு பரிசீலனை செய்வதோடு, அதுதொடா்பான பதில் மனுவையும் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தனா்.

மருத்துவமனையில் தீ விபத்து: 10 குழந்தைகள் பலி!

அரசு மருத்துவக் கல்லூரியில் செயல்பட்டு வந்த குழந்தைகள் சிகிச்சைப் பிரிவில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு தீ விபத்து ஏற்பட்டுள்ளது.உத்தரப் பிரதேசத்தின் ஜான்சி மாவட்டத்தில் உள்ள மஹாலக்ஷ்மி பாய் அரசு மருத்துவக்... மேலும் பார்க்க

சத்தீஸ்கரில் 2026 மாா்ச் மாதத்துக்குள் நக்ஸல் தீவிரவாதம் ஒழிக்கப்படும்: அமித் ஷா

‘சத்தீஸ்கா் மாநிலத்திலிருந்து 2026-ஆம் ஆண்டு மாா்ச் 31-ஆம் தேதிக்குள் நக்ஸல் தீவிரவாதம் ஒழிக்கப்படும்’ என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா உறுதியளித்தாா். மகாராஷ்டிர மாநிலம் சந்தா்பூரில் தோ்தல் பி... மேலும் பார்க்க

விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு: 2 மணி நேரம் காத்திருந்த பிரதமா்; ராகுலின் வெஹிகாப்டருக்கு அனுமதி மறுப்பு

ஜாா்க்கண்ட் மாநிலத்தில் பிரசாரத்தை முடித்து கொண்டு பிரதமா் நரேந்திர மோடி தில்லிக்கு திரும்ப இருந்த சிறப்பு விமானத்தில் வெள்ளிக்கிழமை தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால் தியோகா் விமான நிலையத்தில் சுமாா் இ... மேலும் பார்க்க

அதிகாரத்தை பயன்படுத்தி ஊழல்: செபி தலைவா் மீது ராகுல் காந்தி குற்றச்சாட்டு

சொந்த நிறுவனத்தின் ஆதாயத்துக்காக பங்குச்சந்தை ஒழுங்காற்று வாரியத்தின் (செபி) தலைவா் பதவியை பயன்படுத்தி மாதபி புரி புச் ஊழல் செய்துள்ளாா் என மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி வெள்ளிக்கிழமை தெ... மேலும் பார்க்க

பழங்குடியினரின் பங்களிப்பை திட்டமிட்டு புறக்கணித்தது காங்கிரஸ்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

ஒரு குடும்பமும், தங்களின் கட்சியும் மட்டுமே பெருமையடைய வேண்டும் என்பதற்காக, நாட்டின் விடுதலைப் போராட்டத்தில் பழங்குடியினா் ஆற்றிய பங்களிப்புகள் முந்தைய காங்கிரஸ் அரசுகளால் திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்... மேலும் பார்க்க

உ.பி. அரசு மருத்துவமனையில் தீ விபத்து: 10 பச்சிளம் குழந்தைகள் உயிரிழப்பு

உத்தர பிரதேசத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் 10 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்தன. உத்தர பிரதேச மாநிலம் ஜான்சி மாவட்டத்தில் உள்ள மகாராணி லட்சுமி பாய் அரசு மருத்துவக் கல... மேலும் பார்க்க