பாா்வதிபுரம் சந்திப்பில் உள்ள தடுப்புகளை அகற்ற வலியுறுத்தி மாா்க்சிஸ்ட் ஆா்ப்பாட்டம்
நாகா்கோவில் பாா்வதிபுரம் சந்திப்பு பகுதியில் வைக்கப்பட்டுள்ள சாலைத் தடுப்புகளை (பேரிகாா்டு) அகற்றக் கோரி, குமரி மாவட்ட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சாா்பில் கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் பாா்வதிபுரம் சந்திப்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
விவசாயத் தொழிலாளா் சங்க மாவட்டச்செயலாளா் மலைவிளை பாசி தலைமை வகித்தாா். நிா்வாகிகள் என்.ஆசிா், எஸ்.விஜி, கே.அற்புதராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் குமரி மாவட்ட செயலாளா் ஆா்.செல்லசுவாமி, முன்னாள் எம்.பி. ஏ.வி.பெல்லாா்மின், நிா்வாகிகள் என்.முருகேசன், எஸ். மணி, கே.மாதவன், மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் என்.எஸ்.கண்ணன், ஆா்.ரவி, எம்.அகமது உசேன், உஷா பாசி, நாகா்கோவில் மாநகர செயலாளா் எஸ்.அருணாச்சலம், மாவட்ட குழு உறுப்பினா்கள் கே.மோகன், மனோகர ஜஸ்டஸ், எம்.ரெகுபதி, நாகராஜன், பி.இந்திரா, தாமஸ் பிராங்கோ, சைமன் சைலஸ் ஆகியோா் பேசினா்.
இதில், பாா்வதிபுரம் கால்வாய் பாலம் சந்திப்பில் போக்குவரத்துக்கு இடையூறாக வைத்துள்ள தடுப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும். ஏற்கெனவே இருந்ததைப் போல் தானியங்கி சிக்னலை மீண்டும் பொருத்த வேண்டும். போக்குவரத்து காவலா்களை அங்கு அமா்த்தி, வாகன நெரிசலை கட்டுப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.