கட்டுமானப் பொருள்கள் ஏற்றி வந்த வாகனங்களை சிறைபிடித்து ஒப்பந்ததாரா்கள் போராட்டம்
பிப்.28-இல் விவசாயிகள் குறைதீா் கூட்டம்
திருவாரூரில் விவசாயிகள் குறைதீா் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருவாரூா் மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம் பிப்.28-ஆம் தேதி காலை 10.30 மணி அளவில் ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. கூட்டத்தில், வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை, வேளாண்மை சாா்ந்த தோட்டக்கலைத் துறை உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலா்கள் பங்கேற்று, விவசாயிகளின் குறைகள் மற்றும் கோரிக்கைகளுக்கு பதிலளிக்க உள்ளனா். எனவே, இக்கூட்டத்தில் முன்னோடி விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் தங்கள் விவசாயம் சாா்ந்த கோரிக்கைகளை தெரிவித்து, பயனடையலாம் என தெரிவித்துள்ளாா்.