197 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஆர்சிபி; விக்கெட்டுகளை இழந்து திணறும் சிஎஸ்கே!
பிரதமர் மோடியின் 38 வெளிநாட்டுப் பயணங்கள்! 3 ஆண்டுகளில் ரூ.259 கோடி செலவா?
கடந்த 2022 முதல் 2024 ஆம் ஆண்டு இறுதி வரை பிரதமர் மோடி மேற்கொண்ட அரசுமுறைப் பயணத்துக்கு மொத்தமாக ரூ.259 கோடி செலவானதாக மாநிலங்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கடந்த மூன்று ஆண்டுகளில் பிரதமரின் அரசுமுறை வெளிநாட்டுப் பயணங்களுக்கான ஏற்பாடுகளுக்காக இந்திய தூதரகங்கள் செலவிட்ட தொகை குறித்த தகவலை மாநிலங்களவை எதிா்க்கட்சித் தலைவா் மல்லிகாா்ஜுன் காா்கே கோரிக்கை வைத்திருந்தார். மேலும், அவருக்கான தங்குமிடம், போக்குவரத்து ஏற்பாடுகள், சமூக வரவேற்புகள் மற்றும் இதர செலவுகள் என விரிவான விவரங்களையும் கோரியிருந்தாா்.
கார்கேவின் கோரிக்கையை ஏற்ற மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் பபித்ரா மார்ஹெரிட்டா எழுத்துப்பூர்வமாக அறிக்கை ஒன்றையும் சமர்ப்பித்துள்ளார்.
இதையும் படிக்க: லக்னௌ அணியில் இணையும் ஷர்துல் தாகுர்? மெகா ஏலத்தில் விற்பனையாகாமல் போனவர்!
அந்த அறிக்கையில், 2022 ஆம் ஆண்டு மே முதல் கடந்த ஆண்டு டிசம்பா் வரையிலான காலகட்டத்தில் பிரதமா் மேற்கொண்ட அரசுப் பயணங்களுக்கான செலவின விவரங்கள், ஜொ்மனி முதல் குவைத் வரை 38 பயணங்கள் வாரியாக மத்திய அரசின் பதில் பட்டியலாக வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு மொத்தமாக கிட்டத்தட்ட ரூ.259 கோடி செலவிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செலவுகள் தங்குமிடம், இடத்துக்கான கட்டணம், பாதுகாப்பு, போக்குவரத்து, இதர செலவீனங்கள் என்ற அடிப்படையில் வகைப்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி, தங்குமிடத்துக்காக ரூ.104 கோடியும், இதர செலவுகளாக ரூ.75.7 கோடியும், போக்குவரத்துக்கு ரூ.71.7 கோடியும் செலவிடப்பட்டுள்ளது.
தனிப்பட்ட நாடுகளுக்கான செலவுகளாக அமெரிக்கா (ரூ.38.2 கோடி), ஜப்பான் (ரூ.33 கோடி), ஜெர்மனி (ரூ.23.9 கோடி), ரஷியா (ரூ.16.1 கோடி), பிரான்ஸ் (ரூ.15.7 கோடி), இத்தாலி (ரூ.14.4 கோடி) மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு (ரூ.12.7 கோடி) செலவிடப்பட்டுள்ளது.
இந்த மூன்று ஆண்டுகாலத்தில் தனி நபருக்கான அதிகபட்ச செலவாக 2023 ஆம் ஆண்டு அமெரிக்க பயணத்துக்கு மட்டும் ரூ.22.89 கோடியும், குறைந்தபட்ச செலவாக நேபாள பயணத்துக்கு ரூ.80.01 லட்சமும் செலவிடப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி 2022 ஆம் ஆண்டில் 8 நாடுகளுக்கும், 2023-ல் 10 நாடுகளுக்கும், 2024-ல் 16 நாடுகளுக்கும் அரசு முறைப் பயணமாக சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: கொல்கத்தாவுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை! ஐபிஎல் தொடக்கப் போட்டிக்கு மழையால் பாதிப்பா.?