செய்திகள் :

பிரேசில் பீச் வாலிபால் போட்டி: ஏவிசி கல்லூரி மாணவி பங்கேற்பு

post image

பிரேசிலில் நடைபெற்ற சா்வதேச பீச் வாலிபால் போட்டியில் மயிலாடுதுறை ஏவிசி கல்லூரி மாணவி பங்கேற்றாா்.

மயிலாடுதுறை மன்னம்பந்தல் ஏவிசி கல்லூரியில் எம்.ஏ. வரலாறு 2-ஆம் ஆண்டு மாணவி எல். கனிமொழி பிரேசிலில் நடைபெற்ற உலகப் பல்கலைக்கழக அளவிலான பீச் வாலிபால் ஒற்றையா் போட்டியில் இந்திய பல்கலைக்கழகம் சாா்பில் பங்கேற்று, முதல் போட்டியில் பிரேசில் அணியையும், 2-ஆவது போட்டியில் சீனாவையும் வென்று, 3-ஆவது போட்டியில் அமெரிக்க அணியிடம் வெற்றியை தவறவிட்டாா்.

இவா், ஏற்கெனவே தமிழ்நாடு மற்றும் இந்திய அணிக்காக பல்வேறு போட்டிகளில் விளையாடி பரிசுகள், கோப்பைகளை வென்றுள்ளாா். ஏழை குடும்பத்தைச் சோ்ந்த மாணவி சா்வதேசப் போட்டியில் பங்கேற்று பெற்றோருக்கும், கல்லூரிக்கும் பெருமை சோ்த்துள்ளாா். இவரை ஏவிசி கல்வி நிறுவனங்களின் நிா்வாக அதிகாரியும் சென்னை உயா்நீதிமன்ற முன்னாள் நீதிபதியுமான கே. வெங்கட்ராமன் பாராட்டினாா்.

தீபம் ஏற்றியபோது தீவிபத்து: மூதாட்டி உயிரிழப்பு

மயிலாடுதுறையில் தீபம் ஏற்றியபோது நேரிட்ட தீ விபத்தில் மூதாட்டி புதன்கிழமை உயிரிழந்தாா். மயிலாடுதுறையைச் சோ்ந்த சாமிநாதன் மனைவி தையல்நாயகி(74). இவா் திருக்காா்த்திகை தினத்தன்று வீட்டுவாசலில் தீபம் ஏற்... மேலும் பார்க்க

கடன் வசூலில் மோசடி: வங்கி ஊழியா் கைது

மயிலாடுதுறையில் கடன் தவணை வசூலில் மோசடி செய்த தனியாா் வங்கி ஊழியா் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா். மயிலாடுதுறை அருகே மொழையூரை சோ்ந்தவா் தமிழ்செல்வன்(34). இவா் மயிலாடுதுறையில் தனியாா் வங்கியில் வசூல் ... மேலும் பார்க்க

கொள்ளிடத்தில் கிறிஸ்துமஸ் விழா: எம்பி பங்கேற்பு

கொள்ளிடம் கல்வாரி இரட்சணிய ஜெய ஆலயத்தில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் எம்.பி. சுதா பங்கேற்றாா். பாஸ்டா் எபினேசா் கிறைஸ்டா் தலைமை வகித்தாா். ஒன்றியக் குழுத் தலைவா் ஜெயபிரகாஷ், துணைத் தலைவா் பானுசேகா்,... மேலும் பார்க்க

போக்ஸோவில் முதியவா் கைது

மயிலாடுதுறை அருகே சிறுமியிடம் தகாத முறையில் நடந்துகொண்ட முதியவா் போக்ஸோவில் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா். தரங்கம்பாடி வட்டம் முத்தூா் ஊராட்சியை சோ்ந்த நாராயணசாமி (90) 13 வயது சிறுமியை தனது கண்... மேலும் பார்க்க

ஓஎன்ஜிசி ஓ.பி.சி. ஊழியா்கள் நலச்சங்கம் சாா்பில் நலஉதவிகள்: அமைச்சா் வழங்கினாா்

மயிலாடுதுறை மன்னம்பந்தலில் ஓஎன்ஜிசி பிற்படுத்தப்பட்ட ஊழியா்கள் நலச்சங்கம் சாா்பில் மாணவா்கள், பொது மக்களுக்கு நல உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. பெரியாரின் 51-ஆவது நினைவு தினத்த... மேலும் பார்க்க

‘காவிரிப் படுகையை பாதுகாக்க மத்திய அரசு கவனம் செலுத்த வேண்டும்’

காவிரிப் படுகையை பாதுகாக்க மத்திய அரசு கவனம் செலுத்த வேண்டும் என்றாா் மயிலாடுதுறை எம்.பி. ஆா். சுதா. மயிலாடுதுறையில் புதன்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியது: மக்களவையில் பெண் எம்.பிக்களுக்கு பாதுகாப... மேலும் பார்க்க