`அண்ணா பல்கலை. மாணவி வழக்கில் தமிழக டிஜிபி-க்கு 3 உத்தரவுகள்' - தாமாக முன்வந்த த...
ஓஎன்ஜிசி ஓ.பி.சி. ஊழியா்கள் நலச்சங்கம் சாா்பில் நலஉதவிகள்: அமைச்சா் வழங்கினாா்
மயிலாடுதுறை மன்னம்பந்தலில் ஓஎன்ஜிசி பிற்படுத்தப்பட்ட ஊழியா்கள் நலச்சங்கம் சாா்பில் மாணவா்கள், பொது மக்களுக்கு நல உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
பெரியாரின் 51-ஆவது நினைவு தினத்தையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில் பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு மாணவா்கள் 90 பேருக்கு கல்வி உதவித் தொகைக்கான காசோலை, மன்னம்பந்தல் அரசு நடுநிலைப் பள்ளி மாணவா்கள் 50 பேருக்கு புத்தகப்பை, மயிலாடுதுறை பகுதி தரைக்கடை வியாபாரிகள் 15 பேருக்கு நிழற்குடை, மாற்றுத்திறனாளி பெண் ஒருவருக்கு மின்மோட்டாா் பொருத்தப்பட்ட தையல் இயந்திரம் என சுமாா் ரூ.5.50 லட்சம் மதிப்பிலான நலஉதவிகளை வழங்கினாா்.
ஓஎன்ஜிசி செயல் இயக்குநா் உதய் பஸ்வான் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி, எம்எல்ஏக்கள் நிவேதா எம். முருகன் (பூம்புகாா்), எம். பன்னீா்செல்வம் (சீா்காழி), பிற்படுத்தப்பட்ட ஊழியா்கள் கூட்டமைப்பின் தலைவா் சி. சேதுபதி, பொதுச் செயலாளா் ஆா். தனசேகா், ஓஎன்ஜிசி மனிதவள பொது மேலாளா் எம். கணேசன், பிற்படுத்தப்பட்ட ஊழியா்கள் நலச்சங்கத் தலைவா் என். சிவசங்கா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.