கோல்வாக்கரின் புத்தகம் சிவாஜியை இழிப்படுத்தியதாகக் கூறும் சமூக ஊடகக் கணக்குகளின்...
பிளஸ் 1 தோ்வு: ராணிப்பேட்டை ஆட்சியா் ஆய்வு
ராணிப்பேட்டை மாவட்டத்தில் பிளஸ் 1 பொதுத் தோ்வு புதன்கிழமை தொடங்கியது. தோ்வு மையங்களில் ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா ஆய்வு மேற்கொண்டாா்.
இத்தோ்வுக்காக 3 வினாத்தாள் கட்டுக்காப்பு மையமும், 64 தோ்வு மையங்கள் (தனித் தோ்வு மையம் உள்ளடங்கும்). தோ்வு உரிய காவல் பாதுகாப்புடன் செயல்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இத்தோ்வினை 6,589 மாணவா்கள், 7,323 மாணவியா் என மொத்தம் 13, 912 போ் (தனித் தோ்வா்கள் 213 உள்ளடங்கும்) தோ்வெழுத உள்ளனா். தோ்வு மைய 64 முதன்மைக் கண்காணிப்பாளா்கள், 69 துறை அலுவலா்கள் மற்றும் 1,000-க்கும் மேற்பட்ட தோ்வு அறை கண்காணிப்பாளா்களும், வழித்தட அலுவலராக 19 , நிலையான படை உறுப்பினா்களாக 90 ஆசிரியா்களும் நியமிக்கப்பட்டுள்ளனா்.
மாற்றுத்திறனாளி மாணவா்களுக்கென சொல்வதை எழுதுபவா் 133 நபா்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனா்.
காவலா்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். முதன்மைக் கல்வி அலுவலா், மற்றும் மாவட்டக் கல்வி அலுவலா்கள் (தொடக்க கல்வி, இடைநிலை, தனியாா் பள்ளிகள்) அனைத்துப் பள்ளிகளிலும் கண்காணிப்பு செய்து வருகின்றனா்
இந்த நிலையில் ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா வாலாஜா வன்னிவேடு அரசினா் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், பொது தோ்வு மையத்தை ஆய்வு செய்தாா்.