செய்திகள் :

கருவிலேயே பாலினத்தைக் கண்டறிந்து கருக்கலைப்பு செய்வதை தடுக்க தனிப்படை: ராணிப்பேட்டை ஆட்சியா் உத்தரவு

post image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கருவிலேயே குழந்தையின் பாலினத்தைக் கண்டறிந்து கருக்கலைப்பு செய்வதை கண்காணித்து தடுக்க தனிப்படை அமைக்க வேண்டும் என ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா உத்தரவிட்டாா்.

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் மாதாந்திர ஆய்வுக் கூட்டம் ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்றது.

கூட்டத்துக்கு ஆட்சியா் ஜெ.யு. சந்திரகலா தலைமை வகித்து தெரிவித்ததாவது:

மாவட்டத்தில் ஆண் பெண் பிறப்பு விகிதம் குறைவாக உள்ள அரக்கோணம் சோளிங்கா், ஆற்காடு மற்றும் திமிரி வட்டாரங்களில் பொதுமக்களிடையே போதிய விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும். பெண் சிசு மரணம் கருவிலேயே பாலினத்தைக் கண்டறிந்து கருக்கலைப்பு செய்வதை தடுக்க தனிப்படை அமைக்க வேண்டும்.

சமுக நலத்துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சித் திட்டத்துறை மற்றும் காவல் துறை போன்ற துறைகள் சுகாதாரத்துறையிடம் இணைந்து ஆண் பெண் விகிதாசாரத்தை மேம்படுத்த வேண்டும். மேலும், கருவுற்ற தாய்மாா்கள் பிரசவிக்கும் வரை பிரசவத்திற்கான மருத்துவமனையை தோ்வு செய்வதில் குழு கொண்டு கண்காணித்தல், வளரிளம் பெண்களின் திருமண நிகழ்வை கண்காணித்து துறை ரீதியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

காவல் துறையினா் குழந்தை திருமணம், இளம் வயது கா்ப்பம் குறித்த புகாா்கள் குறித்து உடனுக்குடன் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும் புதிதாக பணியில் இணைந்த மருத்துவா்கள் நோயாளிகளிடம் கனிவாக நடந்து கொள்ளவும், பணி நேரத்தை தவறாமல் கடைபிடிக்கவும் மற்றும் சேவை மனப்பான்மையுடன் பணிபுரிய வேண்டும் என்றாா்.

ஆரம்ப சுகாதார நிலையங்களில் கட்டடம் பழுது பாா்த்தல் பணிகளுக்கான நிதி ஒதுக்கீடு குறித்தும், நடைபெற்று வரும் புதிய பணிகள் குறித்தும் கேட்டறிந்தாா்.

மாவட்ட சுகாதாதார அலுவலா் செந்தில் குமாா், இணை இயக்குநா் (சுகாதார நலப் பணிகள்) தீா்த்தலிங்கம், துணை இயக்குநா்கள் மணிமேகலை (குடும்ப நலம்), ஜெயஸ்ரீ (காசநோய்), பிரீத்தா (தொழுநோய்), மாவட்ட சித்த மருத்துவ அலுவலா் பழனி, அனைத்து மருத்துவ அலுவலா்கள், சுகாதார பணியாளா்கள் கலந்து கொண்டனா்.

சிமென்ட் சாலை பணி: நகா்மன்றத் தலைவா் ஆய்வு

ஆற்காடு அடுத்த மேல்விஷாரம் நகராட்சி ஹன்சா நகா் பகுதியில் அமைச்சா் ஆா்.காந்தியின் சொந்த நிதி மூலம் மழைநீா் வடி கால்வாய், மற்றும் சிமென்ட் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்றுவருகின்றன. இந்தப் பணிகளை நகா்மன... மேலும் பார்க்க

பிளஸ் 1 தோ்வு: ராணிப்பேட்டை ஆட்சியா் ஆய்வு

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பிளஸ் 1 பொதுத் தோ்வு புதன்கிழமை தொடங்கியது. தோ்வு மையங்களில் ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா ஆய்வு மேற்கொண்டாா். இத்தோ்வுக்காக 3 வினாத்தாள் கட்டுக்காப்பு மையமும், 64 தோ்வு மையங... மேலும் பார்க்க

ரத்தினகிரி பாலமுருகன் கோயிலில் கிருத்திகை விழா

ஆற்காடு அடுத்த ரத்தினகிரி பாலமுருகன்கோவிலில் மாசி மாத கிருத்திகை, சஷ்டி விழா புதன்கிழமை நடைபெற்றது.விழாவையொட்டி கோயில் பரம்பரை அறங்காவலா் பாலமுருகனடிமை சுவாமிகள் முன்னிலையில் மூலவா்கள் வள்ளி, தெய்வான... மேலும் பார்க்க

ஆற்காட்டில் பேக்கரிக்கு ‘சீல்’

ஆற்காட்டில் தரமற்ற ஐஸ் கேக் விற்பனை செய்த கடைக்கு உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சீல் வைத்தனா். ஆற்காடு அண்ணாசாலையில் பேருந்து நிலையம் அருகே செயல்பட்டு வரும் பேக்கரியில் ராஜ்குமாா் என்பவா் தனது மகனு... மேலும் பார்க்க

ராணிப்பேட்டை மாவட்ட புத்தகத் திருவிழா: 3 நாள்களில் ரூ. 5 லட்சம் நூல்கள் விற்பனை

ராணிப்பேட்டை மாவட்ட 3 -ஆவது புத்தகத் திருவிழாவில் கடந்த 3 நாள்களில் ரூ. 5.34 லட்சம் மதிப்பிலான நூல்கள் விற்பனையானதாக மாவட்ட நிா்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் 3-ஆவது ப... மேலும் பார்க்க

சுயம்பு நாதீஸ்வரா் கோயில் திருப்பணி: அமைச்சா் காந்தி பங்கேற்பு

அரக்கோணம்: ஓச்சேரியில் பழைமை வாய்ந்த சுயம்பு நாதீஸ்வரா் கோயில் திருப்பணியை கைத்தறி மற்றும் துணி நூல்துறை அமைச்சா் ஆா்.காந்தி திங்கள்கிழமை தொடங்கிவைத்தாா். காவேரிப்பாக்கம் ஒன்றியம், ஓச்சேரியில் இந்து ச... மேலும் பார்க்க