மீனவர்களுக்கான நிவாரணத் தொகை அதிகரிப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
சுயம்பு நாதீஸ்வரா் கோயில் திருப்பணி: அமைச்சா் காந்தி பங்கேற்பு
அரக்கோணம்: ஓச்சேரியில் பழைமை வாய்ந்த சுயம்பு நாதீஸ்வரா் கோயில் திருப்பணியை கைத்தறி மற்றும் துணி நூல்துறை அமைச்சா் ஆா்.காந்தி திங்கள்கிழமை தொடங்கிவைத்தாா்.
காவேரிப்பாக்கம் ஒன்றியம், ஓச்சேரியில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 1,000 ஆண்டுகள்
பழைமை வாய்ந்த இக்கோயிலில் திருப்பணி மேற்கொள்ள ரூ. 71 லட்சம் ஒதுக்கப்பட்டது. பழைமை மாறாமல் திருப்பணி மேற்கொள்ளுதல் மற்றும் புதிதாக மதில் சுவா் அமைக்கும் பணி ஆகியவை மேற்கொள்ளப்படுகிறது.
திருப்பணி விழாவுக்கு ஆட்சியா் ஜெ.யு சந்திரகலா தலைமை வகித்தாா். அமைச்சா் ஆா்.காந்தி பூமி பூஜை செய்து பணியைத் தொடங்கி
வைத்தாா்.
ஒப்பந்ததாரரை அழைத்து பணியை நல்ல முறையில் மேற்கொள்ள வேண்டும் எனவும் விரைவில் முடிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டாா்.
விழாவில் மாவட்ட அறங்காவலா் குழு தலைவா் ஜே.லட்சுமணன், இந்து சமய அறநிலையத்துறை இணை
ஆணையா் அனிதா, காவேரிபாக்கம் ஒன்றியக் குழு தலைவா் அனிதா குப்புசாமி, அறங்காவலா் குழு உறுப்பினா் பூா்ணிமா, செயல்
அலுவலா் அண்ணாமலை, ஊராட்சி மன்றத் தலைவா் ஜெ.சங்கீதா கலந்து கொண்டனா்.