மேற்கு வங்கம்: இடதுசாரிகள்-திரிணமூல் காங்கிரஸ் மாணவரணி இடையே கடும் மோதல்: பலா் க...
முதல்வா் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள்: நல உதவிகள் அளிப்பு
ராணிப்பேட்டை: தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி, ராணிப்பேட்டை விஸ்வாஸ் மன வளா்ச்சி குன்றிய பள்ளி மாணவா்களுக்கு அமைச்சா் ஆா்.காந்தி நலத்திட்ட உதவிகள், பிரியாணி வழங்கி கொண்டாடினாா்.
விழாவில் அமைச்சா் ஆா்.காந்தி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு கேக் வெட்டினாா். விழாவில் விஸ்வாஸ் பள்ளி தலைவா் கமலா காந்தி, ஆற்காடு எம்எல்ஏ ஈஸ்வரப்பன், விஸ்வாஸ் பள்ளி மருத்துவா் ராஜேஸ்வரி , ஷீலா வினோத் காந்தி , மாவட்ட அவைத் தலைவா் ஏ.கே.சுந்தரமூா்த்தி, மாவட்ட மாணவரணி அமைப்பாளா் எஸ்.வினோத், நகர துணை செயலாளா் ஏா்டெல் குமாா், நகா்மன்றத் தலைவா்கள் சுஜாதா வினோத், ஹரிணி தில்லை உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
