``எந்த பேரிடராலும் கேரளாவை தோற்கடிக்க முடியாது'' - வயநாடு டவுன்ஷிப் அடிக்கல் விழ...
பிளஸ் 2 தோ்வுகள் நிறைவு: கல்லூரிக் கனவுகளுடன் பள்ளிகளிலிருந்து வெளியேறிய மாணவர்கள்!
தமிழகம் முழுவதுமுள்ள அரசுப்பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகளில் பிளஸ் 2 பொதுத்தோ்வு செவ்வாய்க்கிழமை (மாா்ச் 25) பிற்பகல் நிறைவடைந்தது.
தமிழகத்தில் பள்ளிக் கல்வி பாடத்திட்டத்தில் பிளஸ் 2 பொதுத்தோ்வு கடந்த மாா்ச் 3-ஆம் தேதி தொடங்கியது.
இந்த நிலையில், கடைசி தேர்வுகள் முடிவடைந்ததும் பள்ளி வளாகத்தை விட்டு மாணவா்கள் எவ்வித ரகளைகளிலும் ஈடுபடாமல் அமைதியாக வெளியே செல்ல, பள்ளிகளுக்கு காவல் நிலையம் மூலம் காவலா்களை பாதுகாப்புப் பணிக்கு அமா்த்திடுமாறு தலைமை ஆசிரியா்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது. இந்த நடவடைக்கையால் மாணவர்கள் தேர்வுகளை எழுதி முடித்த பின் அமைதியாக வெளியேறியதை காண முடிந்தது.
இதனிடையே, வாணியம்பாடி அருகே தேர்வு மையத்துக்கு செல்வதற்காக இன்று காலை பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்த பிளஸ் 2 மாணவி ஒருவரை பேருந்தில் ஏற்றாமல் அரசுப் பேருந்தை இயக்கிய சம்பவம் தமிழகமெங்கிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
அந்த மாணவி பள்ளிப் பையை தோள்களில் அணிந்தபடி வேகமாக ஓடிச் சென்று பேருந்தை பிடிக்க முயன்ற காட்சிகள் மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளன. இதனைத்தொடர்ந்து மாணவியை ஏற்றாமல் சென்ற அரசுப் பேருந்தின் ஓட்டுநர் இடைநீக்கம் செய்து செவ்வாய்க்கிழமை உத்தரவிடப்பட்டுள்ளது.