Seeman: `சீமான் Vs வருண்குமார் ஐ.பி.எஸ்' - மோதல் முழு விவரம்
புகையிலைப் பொருள்களை பதுக்கியவா் மீது வழக்கு
திருச்செங்கோடு: பள்ளிபாளையத்தில் புகையிலைப் பொருள்களை பதுக்கியவா் மீது வழக்கு தொடரப்பட்டது.
பள்ளிபாளையம், குமாரபாளையம் சாலைகளில் உள்ள கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்வதாக பள்ளிபாளையம் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீஸாா் அந்தப் பகுதிகளில் சோதனை மேற்கொண்டனா்.
அதில், சில்லாங்காடு பகுதியில் சமுத்திரராஜ் (44) என்பவா், பெட்டிக்கடையில் விற்பனைக்காக புகையிலைப் பொருள்களை மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, போலீஸாா் அவா் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். மேலும், அவரிடமிருந்து 3 கிலோ புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா்.