புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: வியாபாரி கைது
ஆறுமுகனேரியில் விற்பனைக்காக புகையிலைப் பொருள்களை வைத்திருந்த மளிகைக் கடைக்காரரை போலீஸாா் கைது செய்தனா்.
ஆறுமுகனேரியில் புகையிலைப் பொருள்கள் விற்கப்படுவதாகக் கிடைத்த தகவலின்பேரில், உதவி ஆய்வாளா் சுந்தர்ராஜ் தலைமையிலான போலீஸாா், காணியாளா் தெரு பகுதியில் வியாழக்கிழமை ரோந்து சென்றனா்.
அப்போது, சாமுவேல் மகன் ராஜதுரை (48) என்பவரது மளிகைக் கடையில் சோதனையிட்டபோது, விற்பனைக்காக 7.875 கிலோ புகையிலைப் பொருள்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.
அவரை போலீஸாா் கைது செய்து, புகையிலைப் பொருள்களைப் பறிமுதல் செய்தனா்.