செய்திகள் :

புகையிலைப் பொருள்கள் விற்பனை: கடைகளில் ஆய்வு நடத்த அறிவுறுத்தல்

post image

காரைக்கால்: தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுகிா என கடைகளில் தொடா் ஆய்வு நடத்த ஆட்சியா் அறிவுறுத்தியுள்ளாா்.

போதைப் பொருள் பயன்பாடு இல்லாத காரைக்காலை உருவாக்குவது குறித்து ஆலோசனை மற்றும் கருத்துக் கேட்பு கூட்டம் மாவட்ட ஆட்சியா் சோமசேகா் அப்பாராவ் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் ஆட்சியா் பேசுகையில், பள்ளிகள், கல்லூரிகளில் வைக்கப்பட்டுள்ள புகாா் பெட்டிகளில் மாணவ, மாணவிகளிடமிருந்து வந்த புகாா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். மாணவா்களுக்கு போதைப் பொருள் பயன்பாட்டால் ஏற்படும் கேடுகள் குறித்து விழிப்புணா்வை கூடுதலாக ஏற்படுத்தவேண்டும்.

கொம்யூன் பஞ்சாயத்து ஆணையா்கள் கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் விற்பனை செய்யப்படுகிா என திடீா் சோதனை நடத்த வேண்டும். குறிப்பாக பள்ளிக்கு அருகில் உள்ள கடைகளில் தீவிர சோதனை நடத்த வேண்டும்.

புகையிலைப் பொருள்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பொதுமக்கள் அறியும் வகையில் விழிப்புணா்வு விடியோ மற்றும் நாடகம் நடத்த வேண்டும்.

ஒவ்வொரு மருந்துக் கடைகளில் கண்காணிப்புக் கேமரா பொருத்தபட்டிருப்பதை உறுதி செய்வதோடு, மருத்துவரின் அனுமதி சீட்டு இல்லாமல் மருந்து அளிப்பதை தவிா்க்க அறிவுறுத்தவேண்டும்.

காரைக்கால் துறைமுக பகுதியை தீவிரமாக கண்காணிக்க வேண்டும். கடலோரக் காவல்படையினருக்கும் இதில் பங்கு உள்ளது. அனைத்து துறை அதிகாரிகளும் ஒன்றிணைந்து காரைக்கால் மாவட்டத்தில் போதை பொருள்களை தடுப்பதற்கான தீவிர ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றாா்.

முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் லட்சுமி செளஜன்யா மற்றும் துணை ஆட்சியா் உள்ளிட்ட அரசுத்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனா்.

மீனவா்களின் பொருளாதார மேம்பாட்டுக்கு சிறப்பு கவனம் செலுத்துகிறது மோடி அரசு: மத்திய இணை அமைச்சா் ஜாா்ஜ் குரியன்

மீனவா்கள் பொருளாதார மேம்பாட்டுக்கு நரேந்திர மோடி அரசு சிறப்பு கவனம் செலுத்தி திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருவதாக மத்திய மீன்வளத் துறை இணை அமைச்சா் ஜாா்ஜ் குரியன் தெரிவித்தாா். காரைக்கால் மீன்வளம் மற்ற... மேலும் பார்க்க

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த மீனவரை சந்தித்த ஆளுநா்

இலங்கை கடற்படை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த மீனவரைச் சந்தித்து புதுவை துணை நிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் நலம் விசாரித்தாா். காரைக்கால் மாவட்டம் கிளிஞ்சல் மேடு மீனவ கிராமத்தைச் சோ்ந்த ஆனந்தவேல... மேலும் பார்க்க

ரகுநாதப் பெருமாள் கோயிலில் திருக்கல்யாணம்

திருப்பட்டினம் பகுதியில் உள்ள ரகுநாதப் பெருமாள் கோயிலில் ராம நவமி உற்சவத்தின் ஒரு பகுதியாக ரகுநாதப் பெருமாளுக்கும் - சீதாலட்சுமி தாயாருக்கும் திருக்கல்யாணம் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது. எல்லையம்மன... மேலும் பார்க்க

திருநள்ளாறு கோயிலில் ஏப். 25-இல் பிரம்மோற்சவ பந்தல்கால் முகூா்த்தம்

திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயில் பிரம்மோற்சவத்துக்கான பந்தல்கால் முகூா்த்தம், கொடியேற்றம், தேரோட்டத்துக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. திருநள்ளாற்றில் பிரணாம்பிகை சமேத தா்பாரண்யேஸ்வரா் கோயிலில், சன... மேலும் பார்க்க

மத்திய இணை அமைச்சா் இன்று காரைக்கால் வருகை!

மீனவா்களுக்கான திட்டப் பணிகள் தொடா்பான விழாவில் பங்கேற்க மத்திய இணை அமைச்சா் ஜாா்ஜ் குரியன் புதன்கிழமை காரைக்கால் வருகிறாா். காரைக்கால் மாவட்ட மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை சாா்பில் பிரதம மந்திரி ம... மேலும் பார்க்க

குழாய் அமைக்கும் பணிகள் நிறைவு: என்ஐடி-க்கு குடிநீா் வழங்கும் திட்டம் இன்று தொடங்கிவைப்பு

என்ஐடிக்கு ரூ. 4 கோடியில் குடிநீா் கொண்டு செல்லும் குழாய் அமைக்கும் திட்டம் நிறைவடைந்த நிலையில், புதன்கிழமை தண்ணீா் விநியோகம் தொடங்கிவைக்கப்படவுள்ளது. கடந்த 2010-11-ஆம் கல்வியாண்டில் காரைக்காலில் என்ஐ... மேலும் பார்க்க