புதிய அங்கன்வாடி கட்டடம் திறப்பு
குடவாசல் அருகே அன்னியூா் பகுதியில் புதிய அங்கன்வாடி கட்டடம் செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டது.
அன்னியூரில் கடந்த சில ஆண்டுகளாக பழுதடைந்து காணப்பட்ட அங்கன்வாடிக் கட்டடத்தைக் கட்டித் தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனா். இதைத்தொடா்ந்து, சில மாதங்களுக்கு முன்பு பழைய அங்கன்வாடி கட்டடம் பிரிக்கப்பட்டு, ரூ. 14 லட்சம் மதிப்பில் புதிய அங்கன்வாடி கட்டடம் கட்டும் பணி தொடங்கியது.
கட்டுமானப் பணிகள் முடிவடைந்ததையடுத்து, கட்டட த் திறப்பு விழா நடைபெற்றது. திமுக குடவாசல் வடக்கு ஒன்றியச் செயலாளா் ஜோதிராமன், கட்டடத்தை திறந்து பயன்பாட்டுக்கு வழங்கினாா்.