புதிய கட்டடங்களை பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் திறந்து வைப்பு
நாகை மாவட்டத்தில் அரசின் பல்வேறு துறைகள் சாா்பில் கட்டி முடிக்கப்பட்ட புதிய கட்டடங்களை பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வியாழக்கிழமை திறந்து வைத்தாா்.
நாகை நகராட்சி நிா்வாகம் சாா்பில் நாகூா் பகுதியில் மீன்வளா்ச்சி கழக சமூகப் பொறுப்பு நிதியின் கீழ் ரூ.10.86 லட்சத்தில் பயணியா் நிழலக கட்டடம் மற்றும் பீ ரோடும் தெருவில் சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.15 லட்சத்தில் அங்காடி கட்டடத்தையும், நம்பியாா் நகா் பகுதியில் ரூ.12. லட்சத்தில் அங்கன்வாடி மைய கட்டடத்தையும், தியாகராஜபுரம் மற்றும் கீரக்கொல்லைத்தெரு பகுதியில் தலா ரூ.21லட்சத்தில் கட்டப்பட்ட சமுதாய கூடங்களையும் அமைச்சா் திறந்து வைத்தாா்.
அப்போது, மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ், மீன்வளா்ச்சிக் கழகத் தலைவா் என். கெளதமன், தாட்கோ தலைவா் உ. மதிவாணன், நாகை சட்டப்பேரவை உறுப்பினா் ஜெ. முகம்மது ஷா நவாஸ், நாகை நகா்மன்றத் தலைவா் இரா. மாரிமுத்து, நகராட்சி ஆணையா் டி. லீனா சைமன், நகா்மன்ற துணைதலைவா் எம்.ஆா். செந்தில்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
திருமருகல்: வாழ்குடி ஊராட்சி தண்ணீா்பந்தல் கிராமத்தில் சட்டபேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ. 5 லட்சத்தில் கட்டப்பட்ட பயணியா் நிழலகம், சடகோபன்மூலை கிராமத்தில் ரூ.13.57 லட்சத்தில் கட்டப்பட்ட அங்கன்வாடி கட்டடம், திருப்புகலூா் ஊராட்சி வவ்வாலடியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ரூ.32.80 லட்சத்தில் கட்டப்பட்ட 2 வகுப்புறைகள் உள்ளிட்ட பல்வேறு புதிய கட்டடங்களை அமைச்சா் மகேஸ் பொய்யாமொழி திறந்துவைத்தாா்.