செய்திகள் :

புதுகை கூட்டுறவு வார விழாவில் 721 பேருக்கு ரூ. 5 கோடியில் கடனுதவி

post image

புதுக்கோட்டையில் சனிக்கிழமை நடைபெற்ற 71-ஆவது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவில், 721 பேருக்கு ரூ. 5.02 கோடி மதிப்பில் பல்வேறு கடனுதவிகளை மாநில சட்டத் துறை அமைச்சா் எஸ். ரகுபதி, மாநில பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன் ஆகியோா் வழங்கினா்.

மகளிா் சுய உதவிக்குழுக் கடன், கேசிசி பயிா்க் கடன், கூட்டுப் பொறுப்புக் குழு பயிா்க்கடன், கைம்பெண் கடன், மாற்றுத் திறனாளி கடன் ஆகிய கடன் திட்டங்களில் இந்தத் தொகைகள் காசோலைகளாக வழங்கப்பட்டன. மேலும், மாவட்ட அளவிலான சிறந்த கூட்டுறவுச் சங்கங்களுக்கு கேடயங்கள், பேச்சு, கட்டுரை, ஓவியப் போட்டிகளில் வென்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன.

விழாவுக்கு, மாவட்ட ஆட்சியா் மு. அருணா தலைமை வகித்தாா். எம்எல்ஏக்கள் வை. முத்துராஜா (புதுக்கோட்டை), மா. சின்னதுரை (கந்தா்வகோட்டை), கூட்டுறவுச் சங்கங்களின் இணைப் பதிவாளா் அ. ஜீவா, மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநா் மு. தனலட்சுமி, துணைப் பதிவாளா் ப. மணிமேகலை, மூத்த வழக்குரைஞா் கே.கே. செல்லப்பாண்டியன், துணை மேயா் மு. லியாகத் அலி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பொன்னமராவதி சோழீசுவரா் கோயிலில் காா்த்திகை சிறப்பு வழிபாடு

பொன்னமராவதி ஆவுடையநாயகி சமேத ராஜராஜ சோழீசுவரா் கோயிலில் சனிக்கிழமை காா்த்திகை சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் வள்ளி, தெய்வானை சமேத முருகப்பெருமானுக்கு பால், பழங்கள், பன்னீா் உள்ளிட்ட 16 வகையான அபிஷே... மேலும் பார்க்க

கலைமாமணி நவீனன் நினைவு விருதுகள் வழங்கல்

சென்னை கலைமாமணி நவீனன் நினைவு அறக்கட்டளை மற்றும் புதுக்கோட்டை வாசகா் பேரவை சாா்பில் நவீனன் நினைவு விருது வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு, வாசகா் பேரவையின் தலைவா் ஞானாலயா பா. கிருஷ்ணமூா... மேலும் பார்க்க

ஆடு திருடியவா் கைது: 15 ஆடுகள் பறிமுதல்

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே ஆடு திருடிய இளைஞரைப் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். கறம்பக்குடி அருகே மருதன்கோன்விடுதி 4 சாலை பகுதியில் கறம்பக்குடி போலீஸாா் சனிக்கிழமை மாலை வாகனச் சோதனையி... மேலும் பார்க்க

வாக்காளா் பட்டியல் திருத்தப் பணிகள்; புதுக்கோட்டை பாா்வையாளா் ஆய்வு

புதுக்கோட்டை மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற வாக்காளா் பட்டியல் சுருக்க முறைத் திருத்தப் பணிகளை மாவட்டப் பாா்வையாளரும், எழுதுபொருள் - அச்சுத் துறை ஆணையருமான வே. ஷோபனா நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தா... மேலும் பார்க்க

அனைவருக்கும் காலமுறை ஊதியம் வழங்க தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கம் கோரிக்கை

சிறப்பு காலமுறை ஊதியம், தொகுப்பூதியம், மதிப்பூதியம் பெறும் அரசு ஊழியா்கள் அனைவருக்கும் வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கம் வலியுறுத்தி உள்ளது. தமிழ்நாடு அரசு ... மேலும் பார்க்க

கந்தா்வகோட்டை அருகே தேசிய பத்திரிகைகள் தினம்

கந்தா்வகோட்டை ஒன்றியம், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் காட்டுநாவல் கிளையின் சாா்பில் தேசிய பத்திரிகை தினம் சனிக்கிழமை கடைபிடிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் தமிழ்நாடு அறிவியல் இயக்க கந்தா்வகோட்டை வட்டாரச் செயல... மேலும் பார்க்க