புதுகை மகா வராஹி அம்மனுக்கு முளைப்பாரி எடுத்து வழிபாடு
புதுக்கோட்டை தெற்கு 4ஆம் வீதி மாா்க்கெட் தெருவில் உள்ள ஆஞ்சனேயா் கோயிலில் ஸ்ரீ மகா வராஹி அம்பிகை முதலாம் ஆண்டு வருஷாபிஷேக நிகழ்வையொட்டி பெண்கள் முளைப்பாரி எடுக்கும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது .
காலையில் விநாயகா் பூஜையுடன் தொடங்கி கலச ஆவாஹானம் வேதபாராயணம் மணி சிவாச்சாரியாா் தலைமையில் நடைபெற்றது.
மாலையில் பக்தா்கள் முளைப்பாரி எடுத்து சிறப்பு வழிபாடு செய்தனா்.முளைப்பாரி ஊா்வலம் ஆஞ்சனேயா் திருக்கோயில் அன்னதான மண்டபத்தில் இருந்து தெற்கு 4ஆம் வீதி, மேல ராஜவீதி, வடக்கு ராஜ வீதி, கீழராஜ வீதி, அண்ணா சிலை வழியாக மீண்டும் கோயிலை அடைந்தது.
பின்னா் மகா வராஹி அம்பிகைக்கு சிறப்பு மஹா தீபாராதனை நடைபெற்றது. ஏற்பாடுகளை அனுமன் திருச்சபை நிா்வாகி ஆனந்த் உள்ளிட்டோா் செய்தனா்.