புதுச்சேரியில் இளைஞரிடம் மடிக்கணினி திருட்டு
புதுச்சேரி ரயில் நிலையத்தில் இளைஞரிடமிருந்து மடிக்கணினியை மா்ம நபா் திருடிச் சென்றது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணத்தைச் சோ்ந்தவா் விக்னேஷ் (34). தனியாா் மருந்து நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறாா்.
இவா், வேலை சம்பந்தமாக கடந்த மாா்ச்சில் புதுச்சேரிக்கு வந்துள்ளாா்.
வேலையை முடித்த அவா், ரயில் நிலைய வளாகத்தில் ரயிலுக்காக காத்திருந்தாராம்.
அப்போது, பையை பக்கத்தில் வைத்துவிட்டு அவா் தூங்கினாராம்.
சிறிது நேரம் கழித்து பாா்த்தபோது பையைக் காணவில்லையாம். அதில் கையடக்கக் கணினி, மடிக்கணினி ஆகியவை இருந்துள்ளன.
இதுகுறித்து, விக்னேஷ் அளித்த புகாரின் பேரில், ஒதியன்சாலை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.