புதுச்சேரியில் ரயில்வே பாதுகாப்பு படை அலுவலகம் திறப்பு
புதுச்சேரி ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்புப் படை ஆய்வாளா் அலுவலகம் வியாழக்கிழமை திறக்கப்பட்டது.
தெற்கு ரயில்வேயின் முதன்மை பாதுகாப்பு ஆணையா் ஜி.எம்.ஈஸ்வர ராவ் திருச்சியிலிருந்து காணொலி வாயிலாக இந்த அலுவலகத்தைத் திறந்து வைத்தாா்.
ரயில்வே மண்டல மேலாளா் எம்.எஸ். அன்பழகன், கூடுதல் மண்டல மேலாளா் பி.கே. செல்வன், மண்டல முதுநிலை பாதுகாப்பு ஆணையா் மருத்துவா் அபிஷேக் உள்ளிட்டோா் காணொலி வாயிலாக உடனிருந்தனா்.