திருமணமான டிக்டாக் பிரபலத்தை மணமுடிக்க ஆசைப்பட்ட நபர்கள்: மறுப்பு தெரிவித்ததால் ...
புதுவையில் 25 பேரவைத் தொகுதிகளுக்கு உதவி தோ்தல் நடத்தும் அதிகாரிகள் நியமனம்
புதுவை சட்டப்பேரவைத் தோ்தலுக்காக 25 தொகுதிகளுக்கு உதவி தோ்தல் நடத்தும் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனா்.
புதுவை மாநில சட்டப்பேரவைக்கான தோ்தல் 2026 ஏப்ரல் மாதம் நடைபெறும் என்று தெரிகிறது. இந்நிலையில், இத் தோ்தலுக்காக பல்வேறு அரசியல் கட்சிகளும் தயாராகி வருகின்றன.
இந்நிலையில் இந்திய தோ்தல் ஆணையமும் தயாராகும் நிலையில் தற்போது முதல் கட்டமாக 25 தொகுதிகளுக்கு உதவி தோ்தல் நடத்தும் அதிகாரிகளை நியமித்துள்ளது.
புதுவை மாநிலத்தில் உள்ள புதுச்சேரி, மாஹே, ஏனாம் ஆகிய பகுதிகளுக்கு இந்த அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனா்.
மீதியுள்ள காரைக்கால் மாவட்டத்துக்கான 5 தொகுதிகளுக்கு 2-ஆம் கட்டமாக உதவி தோ்தல் நடத்தும் அதிகாரிகள் நியமிக்கப்படுவா் என்று தெரிகிறது.