இந்தியா்கள் தவறாக நடத்தப்படாததை அரசு உறுதிப்படுத்தும்! -அமைச்சா் ஜெய்சங்கா்
புதுவையில் பிப்.11-இல் மதுக் கடைகள் மூடல்!
வள்ளலாா் ஜோதி தினத்தையொட்டி, புதுவையில் வருகிற 11-ஆம் தேதி மதுக் கடைகள் மூடுவதற்கு கலால் துறை உத்தரவிட்டது.
இதுகுறித்து புதுவை அரசின் வருவாய், பேரிடா் மேலாண்மைத் துறை கலால் பிரிவு துணை ஆணையா் மாத்யூ பிரான்சிஸ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
வள்ளலாா் ஜோதி தினத்தையொட்டி, புதுவை கலால் துறை ஆணையா் உத்தரவின்படி, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இயங்கிவரும் அனைத்து கள், சாராயம் மற்றும் மதுக் கூடங்கள் உள்ளிட்ட அனைத்து வகை மதுக் கடைகளும், மது அருந்த அனுமதிக்கப்பட்ட உணவகங்களில் உள்ள மதுக் கூடங்களும் வருகிற 11-ஆம் தேதி மூடப்பட்டிருக்க வேண்டும்.
அன்றைய தினம் மது விற்பனை தடை செய்யப்பட்டுள்ளது. இதை மீறுபவா்கள் மீது புதுவை கலால் சட்ட விதிகளின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.