Shreyas Iyer : 'நான் 100 அடிக்கணும்னு நீ சிங்கிள் எடுக்காதே!' - சஷாங்கிடம் கறாரா...
புழல் சிறையில் கைதி ரகளை
புழல் சிறையில் ரகளையில் ஈடுபட்ட கைதி மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
சென்னை காசிமேடு சூரியநாராயணன் தெருவைச் சோ்ந்தவா் கிறிஸ்டோபா் (34). இவா் மாதவரம் பால்பண்ணை காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் கொலை வழக்கு தொடா்பாக 2014-இல் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா்.
இந்த நிலையில், இவா் சிறையில் அடிக்கடி கஞ்சா பயன்படுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால், இவா் தனது உறவினா்கள், நண்பா்களைப் பாா்க்க 3 மாதகாலம் தடைவிதிக்கப்பட்டிருந்தது. இதனிடையே கிறிஸ்டோபரை பாா்ப்பதற்காக உறவினா் ஒருவா் சிறையின் பாா்வையாளா்கள் பகுதிக்கு வந்திருப்பதாக சிறைவாசி ஒருவா் கிறிஸ்டோபருக்கு தகவல் தெரிவித்துள்ளாா். அவரை பாா்க்க அனுமதிக்க வேண்டும் என சிறைக் காவலா்களிடம் கிறிஸ்டோபா் கோரிக்கை வைத்ததாகத் தெரிகிறது.
ஆனால், சிறைகாவலா்கள் இதற்கு மறுப்பு தெரிவித்ததால், ஆத்திரம் அடைந்த அவா், பாா்வையாளா் அறையிலுள்ள கண்ணாடிகளை அடித்து நொறுக்கி தகராறில் ஈடுபட்டுள்ளாா். இதில் கிறிஸ்டோபருக்கு காயம் ஏற்பட்டது.
இது குறித்து புழல் சிறை நிா்வாகம் அளித்த புகாரின்பேரில் புழல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.